முத்து (திரைப்படம்)
முத்து (Muthu) 1995-ம் ஆண்டு தமிழில் வெளிந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்க, ரஜினிகாந்த், மீனா, ரகுவரன், சரத் பாபு, ராதாரவி, செந்தில் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளிவந்தது. இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். இது மலையாளத் திரைப்படம், தேன்மாவின் கொம்பது (1994) என்பதின் மறுஆக்கம் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படம் தெலுங்கிலும் இதே பெயரில் வெளியானது மற்றும் மனோ தெலுங்கு பதிப்பில் ரஜினிக்கு குரல் கொடுத்தார் . இத்திரைப்படம் சப்பானிய மொழியில் முத்து ஓடூரு மகாராஜா (ムトゥ 踊るマハラジャ) அதவாது முத்து - ஆடும் அரசர் என்ற பெயரில் வெளியாகி மிகவும் பிரபலமானது. இத்திரைப்படம் இந்தியில் முத்து மகாராஜா என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியானது. நடித்துள்ளவர்கள்
வரவேற்புமுத்து, ஜப்பானிய மொழியில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம்.[1]) நல்ல வரவேற்பையும் பெற்றது.[2] இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இத்திரைப்படத்தைப் பற்றி 2006-ம் ஆண்டு திசம்பர் 14-ம் நாள் ஜப்பானில் நடைபெற்ற விழாவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.[3][4] இத்திரைப்படம், நல்ல வரவேற்பு பெற்றது, இது வெற்றித்திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பாடல்கள்
விருதுகள்
குறிப்புகளும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia