தஞ்சாவூர் தொப்பாரங்கட்டி பிள்ளையார் கோயில்

தஞ்சாவூர் தொப்பாரங்கட்டி பிள்ளையார் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சை மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:தொப்புள் பிள்ளையார்

தஞ்சாவூர் தொப்பாரங்கட்டி பிள்ளையார் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் தெற்கு வீதிக்கு அருகில் அமைந்துள்ளது. தொப்பரங்கட்டிய விநாயகர் கோயில் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. தெற்கலங்கத்திலிருந்து எல்லையம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் வலப்புறம் இக்கோயில் அமைந்துள்ளது.

தேவஸ்தான கோயில்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] இக்கோயிலை தஞ்சாவூர்ப் பிள்ளையார் அளகேஸ்வரம் என்றும் தொப்புள் பிள்ளையார் என்றும் அழைப்பர்.[2]

அமைப்பு

இக்கோயில் விசயநகர ஆட்சியின்கீழ் முதலில் எடுக்கப்பட்ட கோயிலாகும். [2] சற்றே உயர்ந்த தளத்தில் உள்ள இக்கோயில் உள்ளது. இக்கோயிலின் மூலவராக தொப்பாரங்கட்டி பிள்ளையார் உள்ளார். கருவறை மேற்கு நோக்கி உயர்ந்த மேடை மீது உள்ளது. மூலவருக்கு முன்பாக பலிபீடமும், மூஞ்சுறும் காணப்படுகின்றன.

மற்றொரு தொப்புள் பிள்ளையார் கோயில்

கோயில்

தொப்பாரங்கட்டி பிள்ளையார் கோயிலுக்கு அருகே தொப்புள் பிள்ளையார் என்ற பெயரில் மற்றொரு கோயில் உள்ளது. இக்கோயில் கருவறை, விமானம், ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. வாயிலின் முகப்பின் மேல் சுதையால் ஆன விநாயகரும், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரும் காணப்படுகின்றனர்க. ருவறையின் அருகே முருகன், ஆஞ்சநேயர், நாகர், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர்.கோயிலின் முகப்பில் இடப்புறம் 31 ஆகஸ்டு 2006இல் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு காணப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997
  2. 2.0 2.1 குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997, ப.144
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya