புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயில்
புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயில் என்ற சிவன் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. தேவஸ்தான கோயில்தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2] அமைவிடம்இக்கோயில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலின் தென்புறம் தஞ்சாவூர்-திருவாரூர் சாலையையொட்டி, கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.[3] இறைவன்,இறைவிஇக்கோயிலிலுள்ள இறைவன் கைலாசநாதர் ஆவார். மூலவர் சன்னதியின் முன்பாக பலிபீடம், நந்தி உள்ளது. நால்வர் சிலைகள் அங்கே காணப்படுகின்றன. சன்னதியின் இடப்புறம் இறைவி கல்யாணசுந்தரி சன்னதி உள்ளது. கோயிலின் திருச்சுற்றில் கன்னிமூல கணபதி, அய்யப்பன், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், நாகர், கஜலட்சுமி, வினைதீர்க்கும் ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், சனீஸ்வரன், சொர்ண பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். மூலவர் கருவறையின் கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோர் உள்ளனர். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia