தஞ்சாவூர் பஜனைசாலை விட்டோபா கோயில்
தஞ்சாவூர் பஜனைசாலை விட்டோபா கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் கீழ ராஜ வீதியில் அமைந்துள்ளது. தேவஸ்தான கோயில்தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2] அமைப்புஅரண்மனையின் எதிரே இக்கோயில் உள்ளது.[3] இக்கோயில் மகாராட்டிரம்|மராட்டிய மாநிலம்]] பண்டரிபுரம் விட்டோபா கோயிலின் வழிபாட்டு நெறியில் காணப்படுவதாகும். இடுப்பில் கை வைத்துக்கொண்டு செங்கல் மேல் நிற்கின்ற கண்ணன் அருகே இரு தேவியர்கள் காணப்படுகின்றனர். 1819ஆம் ஆண்டு மார்ச் முதல் நாள் மகாசிவராத்திரி நாளில் இக்கோயில் இரண்டாம் சரபோசி மன்னரால் கட்டப்பட்டதற்கான கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது. [4] நுழைவாயில், மண்டபம், மூலவர் விமானம் உள்ளிட்ட அமைப்புகளைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. கருவறையின் முன்புறம் வலப்புறம் விநாயரும், இடப்புறம் ஆஞ்சநேயரும் உள்ளனர். மூலவர்மூலவர் விட்டோபா (கிருஷ்ணன்), பாமா ருக்மணியுடன் உள்ளார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia