தனூராய்
தனூ ராய் என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை, வடிவழகி ஆவார். இவர் பிறப்பால் ஒரு வங்காளியாவார்., இவர் சில தமிழ், மலையாள, வங்காள, கன்னட படங்களிலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மாஸ் , ஹீரோ போன்ற படங்களில் இவர் ஆடிய குத்தாட்டங்களுக்காக பெரும்பாலும் அறியப்படுகிறார். மலையாளத் திரைப்படமான ஈ ஆடுதா கலத்து என்ற படத்தில் இவர் ஏற்ற பாத்திரத்துக்காக அறியப்படுகிறார்.. தொழில்தனு ராய் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தார். இவர் வணிகவியல் பட்டதாரியாவார். 2001 ஆம் ஆண்டில் பூரி ஜெகன்நாத்தின் இட்லு ஸ்ராவணி சுப்பிரமணியம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ஆனந்தம் மற்றும் மனசந்தா நுவ்வே போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.[1] பின்னர் அவனு நிஜம், கோடி ராமகிருஷ்ணாவின் கீலுகுர்ரம். போன்ற படங்களில் தோன்றினார். பின்னர், இவர் குறைந்த செலவில் தயாரிக்கபட்ட திரைப்படங்களில் நடித்தார். மேலும் சத்யம், மாஸ், ந,[2] வியலவாரி கயலு,[3] பெல்லிகனி பிரசாத்[4] உள்ளிட்ட படங்களில் பல குத்தாட்டப் பாடல்களுக்கு ஆடினார். இவர் இரண்டு வங்கப் படங்களில் நடித்தார். அவை பாஷோ நா, இதில் இவர் ஒரு இளம் விதவையாக நடித்தார். அடுத்து மனசந்தா நுவே படத்தின் மறுஆக்கமான மோனர் மஜோ தும்ஹி என்ற வங்கப் படம் ஆகும். கன்ட திரைப்படமான லவ் ஸ்டோரி படத்தில் நடித்தார். இது தெலுங்குத் திரைப்படமான மரோ சரித்ராவின் மறுஆக்கமாகும். முன்தாக இதற்கு பிரேம சரித்ரா என்று பெயரிடப்பட்டிருந்தது. இவர் நடித்த முதல் கன்னடப் படம், பிரீத்தி மடாபாரோ, ஆனால் அது இடையில் நிறுத்தப்பட்டது.[5] தமிழில் இவர் இன்றுI படத்திலும் இந்தித் திரைப்படமான ஹம்ரஸ் படத்தின் தமிழ் மறுஆக்கமான கிரிவலம்,ஆகிய படங்களில் நடித்தார். இவர் 2012 ஆம் ஆண்டு ஈ அடுத காலத்து என்ற திரைப்படத்தின் வழியாக மலையாளத்தில் தனுஸ்ரீ கோஷ் என்ற பெயரில் அறிமுகமானார். படத்தில் 10 வயது சிறுவனின் தாயான மாதுரி என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.[6] ஒரிசாவில், இவர் சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டார், அங்கு ஒரு கிராமத்தில் பழங்குடி மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறார். இவரது வரவிருக்கும் படமான அமர் பாபுவின் அலா ஜரிகிண்டி ஓகக ரோஜு, இது 2006 ஆம் ஆண்டய பிரித்தானிய குற்றவியல் நகைச்சுவை படமான பிக் நத்திங்கின் தெலுங்கு மறுஆக்கம் ஆகும்.[7] ஹாஷிம் மாரிகரின் முன்னோட்டத்தில் சிறப்புத் தோற்றத்தில் இவர் நடிக்க படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான நாச்சோ ரே [8] மற்றும் ஹம்மா ஹம்மா ஆகியவற்றிலும் கலந்துகொண்டுள்ளார். திரைப்படவியல்
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia