தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர்தமிழ்நாட்டின்சட்டமன்றத்தை வழிநடத்தும் அலுவலர் ஆவார். தமிழ்நாடு 1950 வரை சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது, 1950 முதல் 69 வரை சென்னை மாநிலம் என்று வழங்கப்பட்டது. இப்பட்டியலில் 1920 முதல் தற்காலம் வரை, சென்னை சட்டமன்றத்தின் (இரு அவைகள்) தலைவர்களின் பெயர், கட்சி, பதவி காலம் ஆகியவை தரப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் இந்தியாவில் அவைத்தலைவர்கள்
பிரித்தானிய இந்தியப் பேரரசின் ஒரு அங்கமாகிய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் 1920–37 இல் இரட்டை ஆட்சி முறை அமலில் இருந்தது. அம்முறையில் ஓரங்க (unicameral) சட்டமன்றம் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்றழைக்கப்பட்டது. அதன் தலைவர்கள் பிரசிடன்ட் என்று அழைக்கப்பட்டனர். 1937 இல் மாநில சுயாட்சி முறை அமல்படுத்தப் பட்டது. அம்முறையில் சட்டமன்றத்தில் இரு அவைகள் இருந்தன – கவுன்சில் என்றழைக்கப் பட்ட மேலவையின் தலைவர் சேர்மன் எனவும், அசம்பிளி என்றழைக்கப் பட்ட கீழவையின் தலைவர் ஸ்பீக்கர் எனவும் வழங்கப்பட்டனர்.[1][2][3][4][5]
1950 ஜனவரி 26, ஆம் நாள் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. புதிய அரசியல் சட்ட அமைப்பின் படி, மாநில சட்டமன்றங்கள் ஈரங்க (bicameral) அவைகளாக இருந்தன. மேலவை Legislative Council என்றும், கீழவை Legislative Assembly என்றும் வழங்கப் பட்டன. மேலவையின் தலைவர் சேர்மன் என்றும், கீழவையின் தலைவர் ஸ்பீக்கர் என்றும் அழைக்கப்பட்டனர். 1969 ஆம் ஆண்டு சென்னை மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டதைத் தொடர்ந்து, சட்டமன்ற அவைகளும், தமிழ் நாடு சட்டமன்ற கீழவை/மேலவை என்று வழங்கப்பட்டன. மேலவை 1986 இல் நீக்கப்பட்டது.[6][7][8][9][10][11][12][13]