தமுக்கம் மைதானம்![]() தமுக்கம் மைதானம் மதுரையின் வரலாற்றுச் சிறப்பு கொண்ட ஒரு மைதானமாகும். பதிநான்காம் நூற்றாண்டில் மன்னர் விசுவநாத நாயக்கர் ஆல் கட்டப்பட்டு மதுரை நாயக்க வம்சத்தால் பராமரிக்கப்பட்டுவந்தது. அக்காலத்தில் குதிரைப் பந்தயம், யானைப் பந்தயம், மாட்டுச் சண்டைகள் போன்ற விளையாட்டுப் போட்டிகளும் சிலம்பு, கத்திச் சண்டை போன்ற கலைகளும் இங்கு நடத்தப்பயன்பட்டது.[1]. இம்மைதானம் இதனருகேவுள்ள தமுக்கம் அரண்மனையின்(தற்போதைய காந்தி அருங்காட்சியகம்) கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்பட்டது. இதன் அமைப்புமைதானம் அழகர் கோவில் செல்லும் சாலையில் தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ளது. கலையரங்கம் உட்பட சுமார் 50000 ச.அடி பரப்பளவை கொண்ட மைதானமாகும். 1.5 லட்சம் மக்கள் கொள்ளளவு கொண்ட இந்த மைதானத்தின் கலையரங்கம் மட்டும் 20,000 பேர் பங்கேற்கும் வசதியுள்ளது. மதுரை மாநகராட்சியின் மேற்பார்வையில் பொது நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது[2]. இதன் முன் வாசலில் தமிழன்னை சிலையும் பெரியார் சிலையும் உள்ளது. அருகே இராஜாஜி சிறுவர் பூங்காவும், மதுரை அமெரிக்கன் கல்லூரியும் உள்ளது. பொது நிகழ்ச்சிகள்மதுரையின் நெரிசலுக்கு அப்பால் இருப்பதாலும், பரந்த வெளியாக இருப்பதாலும் பல அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு இந்த மைதானம் தற்போது பயன்படுத்தப்பட்டுவருகிறது. அரசியல் கட்சிக் கூட்டம், திருமணங்கள், அரசு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், இலக்கியக்கூட்டம், கலை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என பலவித பொது நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சித்திரைக் கண்காட்சி, வீட்டு உபயோகப்பொருள் கண்காட்சி[3], புத்தகத் திருவிழா போன்றவை ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளாகும்.[4][5][6] இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia