மதுரை மாநகராட்சியின் நிர்வாக வசதிக்காக மண்டலம் எண் 1, 2, 3 மற்றும் 4 என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகள் இந்நான்கு மண்டலங்களில் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மண்டல அலுவலகங்களை நிர்வகிக்க உதவி ஆணையாளர்கள் தலைமையில் அலுவலர்களும், ஊழியர்களும் உள்ளனர்.
மண்டலம் எண் 1 (ZONE I)
வடக்கு மண்டலம் 35.25 சகிமீ பரப்பளவு கொண்டது. மண்டலம் எண் 1-இல் வட்ட எண் 1 முதல் 23 வரை அடங்கியுள்ளது. [2]மண்டல எண் 1-இன் உதவி ஆணையர் அலுவலகம், இரயில்வே காலனி எதிரில், (கென்னட் மருத்துவமனை அருகில்) உள்ளது, இதன் தொலைபேசி எண் 0452 2302140 ஆகும்.
45.25 சகிமீ பரப்பளவு கொண்ட மண்டலம் எண் 2-இல் 26 வட்டங்கள் கொண்டது. இம்மண்டலத்தில் வார்டு எண் 24 முதல் 49 முடிய 26 வட்டங்கள் உள்ளது. [3] இம்மண்டலத்தின் உதவி ஆனையர் அலுவலகம் கே. புதூர் தொழிற்பேட்டை அருகே உள்ளது. இதன் தொலைபேசி எண் 0452 2536048 ஆகும்.
36.66 சகிமீ பரப்பளவு கொண்ட மண்டலம் 3-இல் 25 வட்டங்களைக் கொண்டது. தெற்கு மண்டலம், வட்ட எண் 50 முதல் 74 வரை கொண்டது.[4]இதன் உதவி ஆணையர் அலுவலகம், புது இராமநாதபுரம் சாலை - சேர்மன் முத்துராமய்யர் தெரு சந்திக்கும் இடத்தில் (பழைய தினமணி திரையரங்கம் அருகில்) உள்ளது. இதன் தொலைபேசி எண் 0452 2321121 ஆகும்.
33.54 சகிமீ பரப்பளவு கொண்டது மண்டலம் எண் 4. இம்மண்டலத்தில் வட்ட எண் 75 முதல் 100 முடிய உள்ளது. [5]இதன் உதவி ஆணையர் அலுவலகம் மேலமாரட் வீதி, (மதுரை இரயில்வே ஸ்டேசன் அருகில் (குட்செட் தெரு), 625001-இல் இயங்குகிறது. இம்மண்டலத்தின் தொலைபேசி எண் 0452 2343275 ஆகும்.