தாங்க் மாவட்டம்
தாங்க் மாவட்டம் (Tank District) (பஷ்தூ: ټانک ولسوالۍ, Urdu: ضلع ٹانک, பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தாங்க் நகரம் ஆகும். கைபர் பக்துன்வா மாகாணத்தின் தெற்கில் அமைந்த இம்மாவட்டம் 1 தாலுகாவும், 16 ஒன்றியக் குழுக்களும் கொண்டது. அமைவிடம்தாங்க் மாவட்டத்தின் வடகிழக்கில் லக்கி மார்வாத் மாவட்டம், கிழக்கிலும், தென்கிழக்கிலும் தேரா இஸ்மாயில் கான் மாவட்டம், மேற்கில் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
தட்ப வெப்பம்கோடக்காலத்தில் இதன் வெப்பம் 110–120 °F ஆக இருக்கும். மாவட்ட நிர்வாகம்இம்மாவட்டம் ஒரு தாலுகாவும், 16 ஒன்றியக் குழுக்களையும் கொண்டது.[2] [3]கைபர் மாகாணச் சட்டமன்றத்திற்கு இம்மாவட்டம் ஒரு சட்டமன்றத் தொகுதியை கொண்டுள்ளது. மக்கள் தொகை பரம்பல்2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 4,27,044 ஆகும். அதில் ஆண்கள் 218,883 மற்றும் பெண்கள் 208,131 உள்ளனர். எழுத்தறிவு 40.98% கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 503 பேர் மட்டுமே உள்ளனர்.[1]இம்மாவட்ட மக்களில் பஷ்தூ மொழி 81.87%, சராய்கி மொழி 16.05, இண்டிக்கோ மொழி 0.75% பேசுகின்றனர். இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia