திருப்பதிசாமி
திருப்பதிசாமி (Thirupathisamy) என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தெலுங்குத் திரைப்படத்துறையுலகிலும், தமிழகத் திரைப்படத்துறையுலகிலும் பணியாற்றினார். வெற்றிகரமான "கணேஷ்" என்ற தெலுங்குத் திரைப்படத்துடன் 1998ஆம் ஆண்டில் அறிமுகமான பிறகு, "ஆசாத்" , நரசிம்மா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கினார். சூன் 2001 இல் சென்னையில் நடந்த கார் விபத்தில் இவர் இறந்தார்.[1][2][3] ஆரம்ப கால வாழ்க்கைதிருப்பதிசாமி, சென்னையின் வண்ணாரப்பேட்டையில் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். அம்பேத்கர் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார்.[4] ஆனந்த விகடனில் ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[5][6] தொழில்திருப்பதிசாமி தனது திரைப்பட வாழ்க்கையை சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய வீரா (1994), பாஷா (1995) ஆகிய படங்களுடன் தொடங்கினார்.[4] வெங்கடேஷ் நடித்த தெலுங்கு மொழி அதிரடிப் படமான "கணேஷ்" (1998) மூலம் இவர் இயக்குநராக அறிமுகமானார். இது ஐந்து நந்தி விருதுகளை வென்றது. 2000ஆம் ஆண்டில் அக்கினேனி நாகார்ஜுனா, சௌந்தர்யா, ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்த "ஆசாத்" மற்றொரு வெற்றிகரமான தெலுங்கு அதிரடி படத்தை உருவாக்கி, தனது படைப்புகளுக்கு சாதகமான விமர்சனங்களைப் பெற்றார். விசயகாந்து நடிப்பில் உருவான நரசிம்மா என்ற தமிழ்த் திரைப்படத்தை இயக்குவதிலிருந்து என். மகாராஜன் வெளியேறிய பிறகு இவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது .[7] இவரது முந்தைய இரண்டு படங்களின் வெற்றி காரணமாகவும், "நரசிம்மா" படத்தின் இவரது பணி காரணமாகவும், நடிகர் விஜய், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க "வேலன்" என்ற படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது இவரது தெலுங்குப் படமான "ஆசாத்"தின் மறு ஆக்கமாக இருந்திருக்கும்.[8] படத் தொகுப்புப் பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போது ஒரு கார் விபத்தில் இறந்தார். படம் வெளிவருவதற்கு முன்பே இவர் இறந்ததால் "நரசிம்மா" படத்தின் தயாரிப்பாளர்கள் பின்னர் படத்தை இவருக்கு அர்ப்பணித்தனர்.[9] திட்டமிடப்பட்ட படமான "வேலனி"ன் கதையை பின்னர் இயக்குநர் மோ. ராஜா விஜய் நடிப்பில் வேலாயுதம் (2011) என்ற படத்தைத் தயாரித்தபோது பயன்படுத்திக் கொண்டார் .[10] கரு பழனியப்பன் தனது இயக்கத்தில் வெளிவந்த சதுரங்கம் (2011) படத்தில் நடிகர் ஸ்ரீகாந்தின் கதாபாத்திரம் தனது நண்பராக இருந்த திருப்பதிசாமியின் பெயரிட்டார்.[11] இதேபோல், ஏ. ஆர். முருகதாஸ் தனது தயாரிப்பான எங்கேயும் எப்போதும் (2011) படத்தின் கதை திருப்பதிசாமியின் மரணத்தின் துயரமான சம்பவத்தை நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டார்.[12] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia