வண்ணாரப்பேட்டை
அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 30.96 மீ. உயரத்தில், (13°07′55″N 80°16′42″E / 13.1320°N 80.2784°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு வண்ணாரப்பேட்டை அமையப் பெற்றுள்ளது. பெயர்க்காரணம்வண்ணாரப்பேட்டை ஆங்கில வாணிபக் கழகத்தின் துணிமணிகளை வெளுப்பதற்கும், துவைப்பதற்கும், சாயம் போடுவதற்கும் பல சலவைத் தொழிலாளர்கள் (வண்ணார்கள்) பெத்தநாயக்கபேட்டைக்கு வடபுறத்தில் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு வேண்டிய திறந்தவெளியும், பெருமளவு நீரும் கிடைக்காததால், கறுப்பர் பட்டினத்திற்கு (இப்போதுள்ள ஜார்ஜ் டவுன்) வடக்கில் சென்று குடியேற வேண்டியதாயிற்று. அவர்களுக்கு இந்த இடம் வசதியாக மாறிப்போய் விட்டதால், அங்கேயே நிலைத்து வாழத் தொடங்கிவிட்டனர். அவர்கள் வாழ்ந்த பகுதி இந்தப் பகுதிக்கு வண்ணாரப்பேட்டை என்று பெயர் வந்தது. சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia