திருவெண்ணெய்நல்லூர்
இப்பேரூராட்சிப் பகுதியில் கிருபாபுரீஸ்வரர் கோயில் மற்றும் மெய்கண்டதேவர் கோயில் அமையப்பெற்றுள்ளது. திருவெண்ணெய்நல்லூர் நகரம் தொண்டை மண்டலத்தில் ஒரு பகுதியாக இருந்தது. அமைவிடம்விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்கு 6 கி.மீ. தொலைவில் திருவெண்ணெய்நல்லூர் ரோடு தொடருந்து நிலையம் உள்ளது.[1] இதன் கிழக்கில் பண்ருட்டி 22 கி.மீ.; மேற்கில் திருக்கோயிலூர் 23 கி.மீ.; வடக்கில் விழுப்புரம் 22 கி.மீ.; தெற்கில் உளுந்தூர்பேட்டை 23 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு6.48 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, திருக்கோயிலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2] மக்கள்தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,121 வீடுகளும், 9,623 மக்கள்தொகையும் கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 82% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 979 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 887 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,623 மற்றும் 46 ஆகவுள்ளனர்.[3] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia