மேல் சித்தாமூர் சமணர் கோயில்
மேல் சித்தாமூர் சமணர் கோயில் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் வட்டத்தில், வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில், திண்டிவனம் - செஞ்சி சாலையில், வல்லத்திற்கு அருகில் உள்ள மேல்சித்தாமூர் ஊராட்சியில் உள்ள மேல்சித்தாமூர் கிராமத்தில் உள்ளது.[1] இக்கோயில் தமிழ்ச் சமணர்களின் ஆன்மீகத் தலைமையிடமாக உள்ளது.[2][3] அமைவிடம்மேல் சித்தாமூர் சமணக் கோயிலும், மடமும் செஞ்சிக்கு கிழக்கில் 10 கி.மீ. தொலைவிலும்; திண்டிவனம் நகரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், வல்லம் அருகே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. கோயில் வரலாறுபொ.ஊ. 9 மற்றும் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு சமணக் கோயில்கள் மேல் சித்தாமூர் கிராமத்தில் உள்ளது. அதில் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த மலைநாதர் கோயில், சமண தீர்த்தங்கரரான நேமிநாதருக்குக்கும், 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில், பார்சுவநாதருக்கும்[4] அர்பணிக்கப்பட்டுள்ளது. மலைநாதர் கோயிலில் பொ.ஊ. 9ஆம் நூற்றாண்டில் செதுக்கிய தீர்த்தங்கரர்கள், பாகுபலி போன்ற அருகதர்கள், கணாதரர்கள், மற்றும் காவல் தேவதைகளான யட்சினிகள் பத்மாவதி, அம்பிகை மற்றும் யட்சன் தரணேந்திரன் ஆகியவர்களின் கற்சிற்பங்கள் உள்ளன.[5] இக்கோயிலில் பொ.ஊ. 1578ஆம் ஆண்டில் அமைக்கபப்ட்ட 50 அடி உயரம் கொண்ட, ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட, 50 அடி உயரம் கொண்ட, மானஸ்தம்பம், கொடி மரம், பலி பீடம் கம்பம் உள்ளது. அருகில் உள்ள தேர் வடிவ மண்டபம், இரண்டு யானைகளால் இழுத்துச் செல்வது போன்று கட்டப்பட்டுள்ளது. சமண மடம்வீரசேனாச்சாரியாரால் துவக்கப்பட்ட சமணக் காஞ்சியில் இருந்த பழைமையான மடம், காலப்போக்கில் மேல் சித்தாமூரில் இடம்பெயரப்பட்டு, தமிழ்ச் சைனர்களின் ஆன்மீகத் தலைவரான இலக்குமிசேனா என்பவரால் நிர்வகிக்கப்படுகிறது.[6] மேல் சித்தாமூர் கோயில் குறித்து அப்பாண்டைநாதர் உலா, தோத்திரத்திரட்டு, ஜைனசேத்திரமாலை போன்ற நூல்களில் பாடப்பட்டுள்ளது. இம்மடம் தமிழ்ச் சமணர்களின் தலைமையிடமாகும்.[6][7] விழாக்கள்ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், பத்துநாட்கள் பெருவிழா நடைபெறும். ஏழாம்நாள் தேரோட்டம் நடைபெறும். படக்காட்சிகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia