சைவ சமயத்தின் மூல மந்திரம் "நமசிவாய" எனும் திருவைந்தெழுத்து ஆகும். இது பஞ்சாட்சரம் எனவும் பஞ்சாட்சர மந்திரம் (Shiva Panchakshara அல்லது Panchakshara) எனவும் அழைக்கப்படுகிறது.
நமசிவாய என்பதை சிவபெருமானின் பெயர்களில் ஒன்றாகும்.[2][3]
இந்த பஞ்சாட்சரமானது ஸ்தூல பஞ்சாட்சரம் எனவும், சூட்சும பஞ்சாட்சரம் எனவும் இருவகைபடுகிறது.[4] நமசிவாய என்பது ஸ்தூல பஞ்சாட்சரம் எனவும், சிவாயநம என்பது சூட்சும பஞ்சாட்சரம் எனவும் அறியப்படுகிறது.
சிவாயநம எனவும் இதனைக் கொள்வர். சிவாயநம என்பது சிவபெருமானைப் போற்றிப் பாடும் மந்திரச் சொல்லாக உள்ளது. இதற்குப் பல பொருள் உண்டு என்று இந்து சமயத்தில் சைவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
யசுர் வேதத்திலே நான்காவது காண்டத்திலே சிவ பிரானைப் போற்றும் உருத்திர மந்திரம் உள்ளது. அதில் சூத்திரம் 8-1 நமசிவாய எனும் ஐந்தெழுத்து பற்றிக் கூறுகிறது. ஆனால் சதா காலமும் அனைவரும் ஓதக்கூடிய மந்திரமாகத் 'திருவைந்தெழுத்து' கூறப்படுகிறது.
விளக்கம்
திருமூலர் முதலான தமிழ்ப் புலவர்கள் உட்பட இம் மந்திரத்துக்கு அவரவர் கண்ட விளக்கங்களைக் கூறியுள்ளனர். அவை எந்த மொழியியலையும் பின்பற்றவில்லை. உண்மையில் அவை மந்திரமொழி.
மந்திரம் பொதுமொழி. அதனைப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பது ஒரு சாரார் கருத்து
நமசிவாய மந்திரம் தமிழ் என்போர் தமிழியல் வழியில் சில விளக்கங்களைத் தருகின்றனர்.
நமசிவாய மந்திரம் வடமொழி என்போர் சில விளக்கங்களைத் தருகின்றனர்.
மந்திரமா, தமிழா, வடமொழியா என்பது அவரவர் மனப்பாங்கைப் பொருத்தது. இது சரி, இது தவறு, என யாராலும் நிறுவ இயலாது.
தமிழியல் விளக்கம்
நமசிவாய சிவாயநம
நம - 'நாம்' என்னும் பால்பகா அஃறிணைப் பெயரின் ஆறாம் வேற்றுமை நிலை 'நம'. இது 'அது' என்னும் உருபினை ஏற்கும்போது 'நமது' என வரும். உருபு மறைந்திருக்கும் வேற்றுமைத்தொகையில் 'நம' என நிற்கும். இது 'என் கை' 'என கைகள்' என்று அமைவதைப் போன்றது.
சிவ் - சிவன் 'சிவ்' என்னும் சத்தியை அவளிடம் பெற்றுக்கொண்டு அவளோடு ஒன்றாய் இருப்பவன்.
ஆய - ஆயம். ஆய என முடிந்த பின்னர் மீண்டும் நம வந்து சேரும்போது மகர-ஒற்று இடையில் தானே வந்துவிடும். சிவாய[ம்]நம எனவே ஆய என்பது ஆயம் ஆகிவிடும். ஆயம் என்பது ஆயத்தாராகிய திருக்கூட்டம்
இவற்றால் நாம் அறிவது நம்முடையவை சிவத்திருக்கூட்டம் என்பதே 'நமசிவாய' என்பதன் பொருள்.
நமச்சிவாய
நம் அச்சு இவ் ஆய[ம்]
நமக்கு அச்சாக இருப்பதெல்லாம் நம்முடன் இருக்கும் திருக்கூடமே. பிறர் இல்லாமல் நம்மால் தனித்து வாழமுடியாது அல்லவா?
நமசிவாய என்பது சிவபெருமானின் மந்திரம் சிவ பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய மந்திரம். நமசிவாய என்பது என்ன அர்த்தம்
ந - சாத்வீகம்
ம - கண்ணியம்
சி - அன்பு
வா - ஞானம்
ய - மன்னிப்பு.
சிவனை வணங்கும் பக்தர்களுக்கு வாழ்க்கைழும், துரவரத்திலும் தினமும் அமைதியை மதித்து இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.
முதலில் சிவன் யார்?
சிவன் ஒரு அன்புகடவுள்.
இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிரிணங்களுக்கும் சிவன் தான் தாய், தகப்பன் அதனால் தான் சிவனை அம்மை அப்பன் என்று அழைக்கப்படுகிறோம்.
நல்ல ஒழுக்கங்களை முதலில் சிவன் தான் மக்களுக்கு பகுத்து அறிந்து உபதேசித்தார்.
சிவபெருமான் மக்களுக்கு சொன்ன உபதேசங்கள்?
நம்மை பெற்ற தாய்யையும் மற்றும் தந்தையையும் மதிக்க வேண்டும்.
ஆண்களை நாம் தந்தை ஸ்தானத்திலும் மதிக்க வேண்டும் மற்றும் மகன் ஸ்தானத்திலும் மதிக்க வேண்டும்.
பெண்களை நாம் தாய் ஸ்தானத்திலும் மதிக்க வேண்டும் மற்றும் மகள் ஸ்தானத்திலும் மதிக்க வேண்டும்.
பெற்ற பிள்ளைகளை நாம் அன்பாகவும், பாசமாகவும், நல்ல ஒழுக்கங்களை சொல்லி வளர்க்க வேண்டும்.
கணவன் மற்றும் மனைவி எப்படி வாழ வேண்டும் என்று சிவபெருமான் சொன்ன உபதேசம்:-
கணவன் மனைவி மனதை புண்படுத்தக்கூடாது.
மனைவி கணவன் மனதை புண்படுத்தக்கூடாது.
பெண்களை துன்புறுத்தக்கூடாது.
கணவன் மற்றும் மனைவி வாழும் வாழ்க்கையில் அன்பாகவும், பாசமாகவும், நல்ல தோழமையாகவும், மன நிம்மதியாக வாழ வேண்டும்.
சிவ பக்தர்கள் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஐந்து செயல்கள்:-
எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும்.
மனிதநேயத்தை மதிக்க வேண்டும்.
மனிதர்கள் உயிரோட வாழ வேண்டும்.
அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது.
கலப்பு திருமணம் செய்யக்கூடாது.
மனிதர்கள் வாழ்க்கையில் கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு இந்த இரண்டு மனநிலையில் எப்போதும் உயிரோட வாழவேண்டும்.
கண்ணியம் மற்றும் கட்டுப்பாடுளை மனிதர்கள் மதித்தால் வாழ்க்கையில் மன அமைதியாகவும், மனமகிழ்ச்சியாகவும், மனநிம்மதியாக இருக்கும்.
கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு இந்த இரண்டு குணங்களை மதிக்க வேண்டும்.
பெண்களிடம் கண்ணியம்மாகவும் வாழவேண்டும் மற்றும் பெண்களிடம் கட்டுப்பாடாகவும் வாழவேண்டும்.
பார்வதி என்பவள் கண்ணியம் குணம் தேவதை.
சிவபெருமான் என்பவர் கண்ணியம், கட்டுப்பாடு, நல்ல ஒழுக்கம், பகைவர்கள் திருந்தி வாழும் அறிவு, சித்தனுக்கு சித்தர் மற்றும் தெளிவான அறிவு இந்த ஆறு அறிவு குணங்களை காக்கும் தெய்வம் தான் சிவன்.
மனித வாழ்க்கையில் கண்ணியமாக வாழ வேண்டும் மற்றும் மனித வாழ்க்கையில் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வாழ வேண்டும்.
நமசிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை தினமும் சொல்ல வேண்டும்.
சிவலிங்கத்தின் பற்றி சிவபெருமான் என்ன உபதேசிக்கிறார் என்றால் ஆறு அறிவு பெற்ற மனிதர்களை மதிக்கவேண்டும். ஆண்களையும் மற்றும் பெண்களையும் மதிக்க வேண்டும் என்று சிவபெருமான் மனிதர்களுக்கு உபதேசிக்கிறார். மனித உயிர்களான ஆத்மாவின் உருவம் தான் சிவலிங்கம்.