திரை இசைக் களஞ்சியம் (நூல்)
திரை இசைக் கலைஞர்கள்திரை இசைக் கலைஞர்கள் என்ற வகையில் பாடகர்கள், பாடலாசிரியர்கள், வாத்திய இசை வித்துவான்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் ஆகியோர் இடம் பெறுகிறார்கள். அந்தக் கலைஞர்களின் விபரங்களை "திரை இசைக் களஞ்சியம்" நூல் கால அட்டவணைப்படி பட்டியலிட்டு தொகுத்துத் தருகிறது. நூலில் விபரம் சேர்க்கப்பட்டிருக்கும் கலைஞர்கள்
நூலாசிரியர்இந்த நூலின் ஆசிரியர் வாமனன் ஒரு திரை இசை வரலாற்றாய்வாளர்.[2] டி. எம். சௌந்தரராஜன்[3], எம். எஸ். விஸ்வநாதன்[4], கே. வி. மகாதேவன் உள்ளிட்ட பலரைப் பற்றித் தனியாக நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளார்.[5] தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.[6] நூலின் வரலாறுகலைஞர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ள இந்த நூலுக்கே ஒரு வரலாறு உண்டு. 1999 ஆம் ஆண்டுதிரை இசை அலைகள் - பாகம் 1 என்ற தலைப்பில் ஆசிரியர் வாமனன் ஒரு நூலை முதன் முதலில் வெளியிட்டார். அதில் கால வரிசைப்படி சில கலைஞர்கள் பற்றிய விபரம் தாங்கிய கட்டுரைகள் அடங்கியிருந்தன. 1999 ஆம் ஆண்டு தமிழக அரசு, தமிழ்க்கலைகள், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் ஆகியவை அடங்கிய பகுப்பின் கீழ் இந்த நூலுக்கு முதற்பரிசு வழங்கியது.(காண்க: தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1999) இதன் பின்னர் திரை இசை அலைகள் பாகம் - 2, 3, 4, 5 ஆகியவை ஒவ்வொன்றும் சில வருட இடைவெளி விட்டு வெளியாகின. ஒவ்வொரு பாகத்திலும் அதில் இடம்பெற்ற கலைஞர்கள் பற்றிய கட்டுரைகள் கால வரிசைப்படி அமைந்திருந்தன. இந்த 5 பாகங்களையும் ஒன்றிணைத்து ஒரே புத்தகமாக ஆக்கப்பட்டதே திரை இசைக் களஞ்சியம் நூலாகும். இந்த நூலிலும் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகள் கால ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன. வெளியீடுதிரை இசைக் களஞ்சியம் நூல் முதல் பதிப்பு 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை 600108 இலுள்ள மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் 1000.00 விலையில் மொத்தம் 1280 பக்கங்களைக் கொண்டுள்ள புத்தகத்தின் எடை 2.8 கிலோ ஆகும். சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia