துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம்
துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம் (Universiti Tunku Abdul Rahman, (UTAR) என்பது மலேசியாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பல்கலைக்கழகம் யூத்தார் (UTAR) கல்வி நிறுவனம் என்னும் இலாப-நோக்கற்ற அமைப்பினால் நிறுவப்பட்டது.[4] மலேசியாவின் நான்கு இடங்களில் வளாகங்களைக் கொண்டுள்ளது. அவை: பெட்டாலிங் ஜெயா, கோலாலம்பூர், சுங்கை லோங், மற்றும் கம்பார் ஆகியவை ஆகும். பொது2002-ஆம் ஆண்டில் தொடக்கப்பட்ட இந்தப் பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டில் 411 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அடுத்த சில ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்தது. 2022ஆம் ஆண்டு, இங்கு 16,975 மாணவர்கள் கல்வி பயில்வதாகப் பல்கலைக்கழக அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. 2012, 2013 ஆம் ஆண்டுகளில் ஆசியாவின் முதல் 300 சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இந்தப் பல்கலைகழகம் தரப்படுத்தப்பட்டுள்ளது.[5][6]. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia