மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகம்
மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகம் (ஆங்கிலம்:(Universiti Malaysia Perlis; மலாய்: Universiti Pahang Malaysia) (UniMAP) என்பது மலேசியா, பெர்லிஸ், கங்கார்; ஆராவ் நகரங்களில் உள்ள ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம்; மற்றும் பல்துறை தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும். தொடக்கத்தில் இந்தப் பல்கலைக்கழகம் வடக்கு மலேசிய பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி (ஆங்கிலம்:(Northern Malaysia University College of Engineering; மலாய்: Kolej Universiti Kejuruteraan Utara Malaysia) (KUKUM) எனும் பெயரில் நிறுவப்பட்டது.[5] பின்னர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகமாகத் தகுதி உயர்த்தப்பட்டது. பொதுஇந்தப் பல்கலைக்கழகம் 25 சூலை 2001 அன்று மலேசியாவின் உயர் கல்விக்கான 17-ஆவது பொதுக் கல்வி நிறுவனமாக (வடக்கு மலேசிய பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி) நிறுவப்பட்டது. 7 பிப்ரவரி 2007 அன்று, வடக்கு மலேசிய பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி ஒரு முழு அளவிலான பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டு அதன் தற்போதைய மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகம் எனும் பெயரைப் பெற்றது.[6] வரலாறு2 மே 2002 அன்று பெர்லிஸ் ஆராவ் நகரில் உள்ள ஒரு தற்காலிக வளாகத்தில் அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது. சிறிது காலத்திற்குப் பிறகு, பாடத்திட்ட மேம்பாடு, கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மாணவர் சேர்ப்பு நடவடிக்கைகள் தொடங்கின. 2002/2003 கல்வி அமர்வுக்கு 119 மாணவர்களின் முதல் சேர்க்கை 20 சூன் 2002 அன்று தொடங்கியது. தொடக்கத்தில் இரண்டு பாடத் திட்டங்களை வழங்கிய மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகம்; தற்போது ஏறக்குறைய 10,000 மாணவர்களுக்கு கல்வி வசதிகளை வழங்கி வருகிறது. ஆறு பட்டையத் துறைகள், 37 இளங்கலை பட்டப்படிப்புகள், 20 முதுகலை பட்டப்படிப்புகள், பன்னிரண்டு தத்துவவியல் ஆய்வுகள்; ஆகியவற்றை வழங்கி வருகிறது. தீபகற்ப மலேசியாவின் வடக்கில் அமைந்துள்ள மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகம்; பெர்லிஸ் மாநிலத்தின் 30 இடங்களில் தன் துணைக் கல்வி வளாகங்களைக் கொண்டுள்ளது. தரவரிசைகள்
இணைப் பல்கலைக்கழ்கங்கள்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia