மலேசிய துன் உசேன் ஓன் பல்கலைக்கழகம்
1.853056, 103.086389 மலேசிய துன் உசேன் ஓன் பல்கலைக்கழகம் (ஆங்கிலம்:(Tun Hussein Onn University of Malaysia; மலாய்: Universiti Tun Hussein Onn Malaysia) (UTHM) என்பது மலேசியா, ஜொகூர், பத்து பகாட், பாரிட் ஜாவா புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம்; மற்றும் பல்துறை தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும். தொடக்கத்தில் இந்தப் பல்கலைக்கழகம் துன் உசேன் ஓன் தொழில்நுட்பக் கழகம் (ஆங்கிலம்:(Tun Hussein Onn Institute of Technology; மலாய்: Institut Teknologi Tun Hussein Onn) (ITTHO) எனும் பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் அதன் பெயர் துன் உசேன் ஓன் தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரி (ஆங்கிலம்:(Tun Hussein Onn University College of Technology; மலாய்: Kolej Universiti Teknologi Tun Hussein Onn) (KITTHO) என மாற்ரப்பட்டது. பொதுஇந்தப் பல்கலைக்கழகம் 2007-ஆம் ஆண்டில், முழு பல்கலைக்கழகத் தகுதிக்கு தரம் உயர்த்தப்பட்டது. மலேசிய துன் உசேன் ஓன் பல்கலைக்கழகம் என்ற பெயர் அப்போதைய மலேசிய கல்வி அமைச்சர் இசாமுடின் உசேன் அவர்களால் அதிகாரப்பூர்வமாகச் சூட்டப்பட்டது. மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் வலையமைப்பில் (Malaysian Technical University Network) (MTUN) ஓர் உறுப்பினராகவும் உள்ளது. வரலாறு16 செப்டம்பர் 1993-இல் மலேசிய துன் உசேன் ஓன் பல்கலைக்கழகத்தின் வரலாறு தொடங்கியது. மலேசிய துன் உசேன் ஓன் பல்கலைக்கழகம் முன்பு பல்நுட்பியல் பயிற்றுநர் பயிற்சி மையம் (Polytechnic Staff Training Center) என அழைக்கப்பட்டது. பல்வேறு பொறியியல் துறைகளில் பல்நுட்பியல் பயிற்றுநர்களுக்குப் பயிற்சி அளிப்பதே அந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும். அந்தப் பயிற்சி மையத்தை மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய கல்வி அமைச்சு ஆகிய இரு கல்விசார் அமைப்புகளும் கூட்டாக நிர்வகித்தன. பல்நுட்பியல் பயிற்றுநர் பயிற்சி மையம்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பல்நுட்பியல் பயிற்றுநர் பயிற்சி மையம்; துன் உசேன் ஓன் தொழில்நுட்பக் கழகம் என மேம்படுத்தப்பட்டது. 27 செப்டம்பர் 2000 அன்று, மலேசிய அரசாங்கம் அந்தக் கழகத்திற்கு ஒரு பல்கலைக்கழக-கல்லூரி தகுதிய வழங்க ஒப்புக்கொண்டபோது, அந்தக் கழகம் மற்றொரு மைல்கல்லை எட்டியது. அதன் பெயர் துன் உசேன் ஓன் தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரி (Kolej Universiti Teknologi Tun Hussein Onn) (KITTHO) என மாற்றம் கண்டது. மலேசிய அரசாங்கம், 20 செப்டம்பர் 2006 அன்று, பல்கலைக்கழகக் கல்லூரிக்கு முழு பல்கலைக்கழகத் தகுதியை வழங்க ஒப்புக்கொண்டது. மற்றும் அதன் பெயரை மலேசிய துன் உசேன் ஓன் பல்கலைக்கழகம் என மாற்றுவதற்கும் ஒப்புதல் வழங்கியது.[3] பெயர் மாற்றங்கள்
இணைப் பல்கலைக்கழ்கங்கள்
தரவரிசைகள்
காட்சியகம்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia