துணிவு (2023 திரைப்படம்)
துணிவு (ஆங்கிலத்தில்: Thunivu)[3] என்பது 2023 இல் வெளியான ஒரு தமிழ் வங்கிக் கொள்ளை அதிரடி நாடகத் திரைப்படமாகும். இத் திரைப்படத்தின் கதைவசனம் எழுதி வினோத் இயக்கியிருந்தார். போனிக் கபூர் தயாரித்தார். இப்படத்தில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பவானி ரெட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்திலும், சான் கொக்கின், மமதி சாரி, அசய், வீரா பகவதி பெருமாள் ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். கதைச்சுருக்கம்கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. சென்னையில் பிரதான பகுதியில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் யுவர் பேங்க் என்ற வங்கியிலிருக்கும் பணத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டம் தீட்டுகிறது. அதன்படி வங்கிக்குள் நுழையும் அந்த கும்பல், துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களையும், அங்கிருக்கும் வாடிக்கையாளர்களையும் பணயக் கைதிகளாக்குகிறது. இதில் வாடிக்கையாளர் போல வரும் டார்க்டெவில் (அஜித் குமார்) கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு, மொத்த வங்கியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். உடனே டிஜிபி தயாளன் (சமுத்திரக்கனி) தலைமையிலான காவல்துறை, மற்றும் அரசு எந்திரமும் டார்க் டெவிலைப் பிடிப்பதற்காக முயற்சிக்கிறது. இறுதியில் காவல் துறை கையில் டார்க்டெவில் சிக்கினாரா, இவர் எதற்காக வங்கியில் கொள்ளையடிக்க நினைக்கிறார், அங்கிருக்கும் பணம் யாருடையது, இந்தக் கேள்விகளுடன் திகில் கலந்த திரைக்கதையோடு திரைப்படம் நகர்கிறது.[4] நடிப்புக்கலைஞர்கள்
ஒலிப்பதிவு
இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.[9]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia