துரை கோவிந்தராசன்

துரை கோவிந்தராசன்
பதவியில்
1971–1976
முன்னையவர்ஆர். ஆர். துரை
பின்னவர்தொகுதி நீக்கம்
தொகுதிகந்தர்வக்கோட்டை
பதவியில்
1977–1980
பின்னவர்ந. சிவஞானம்
தொகுதிதிருவோணம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1985–1989
முன்னையவர்மா. சுப்பிரமணியன்
பின்னவர்துரை சந்திரசேகரன்
தொகுதிதிருவையாறு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1937
வடக்கூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்விவசாயி

துரை கோவிந்தராசன் (Durai Govindarajan)(பிறப்பு 1937-இறப்பு 07 நவம்பர் 2022[1]) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். கோவிந்தராசன் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வடக்கூரில் 1937 ஆம் ஆண்டில் பிறந்தார். பள்ளிக் கல்வியினை ஒரத்தநாட்டில் உள்ள கழக உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான இவர் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[2] 1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவோணம் தொகுதியிலிருந்தும், 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருவையாறு தொகுதியிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டசபைக்கு துரை கோவிந்தராசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 கந்தர்வக்கோட்டை திமுக 42,025 57.59[4]
1977 திருவோணம் அதிமுக 23,779 29.06[5]
1984 திருவையாறு அதிமுக 46,974 55.75[6]

மேற்கோள்கள்

  1. "அதிமுக முன்னாள் கொறடா துரை. கோவிந்தராஜன் காலமானார்". www.dinakaran.com. Archived from the original on 2022-11-07. Retrieved 2022-11-07.
  2. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. Madras: Tamil Nadu Legislative Assembly Department. 1971. p. 111.
  3. 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
  4. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  5. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  6. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya