தெக்கினீசியம் பெண்டாபுளோரைடு
தெக்கினீசியம் பெண்டாபுளோரைடு (Technetium pentafluoride) TcF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் இருமச் சேர்மமாகும். டெக்னீசியம் உலோகமும் புளோரின் தனிமமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3][4] தயாரிப்புநைட்ரசனுடன் கலந்த நீர்த்த புளோரின் வாயுவை தெக்கினீசியம் பொடியுடன் சேர்த்து சூடாக்குவதன் மூலம் தெக்கினீசியம் பெண்டாபுளோரைடு தயாரிக்க முடியும்:
அயோடின் பெண்டாபுளோரைடில் உள்ள தெக்கினீசியம் அறுபுளோரைடு கரைசலில் அயோடின் வாயுவை செலுத்தி தயாரிப்பது மற்றொரு வழிமுறையாகும்:
இயற்பியல் பண்புகள்தெக்கினீசியம் பெண்டாபுளோரைடு செஞ்சாய்சதுரப் படிக அமைப்பில்[5] மஞ்சள் நிறப் படிகங்களாக உருவாகிறது.[6] தண்ணீருடன் வினைபுரிகிறது, மற்றும் எளிதில் ஆவியாகும். வேதிப் பண்புகள்தெக்கினீசியம் பெண்டாபுளோரைடு நீரால் நீராற்பகுப்பு செய்யப்படுகிறது. மேலும் இச்செயல் முறையில் உருவாகும் நிலையான தெக்கினீசியம் சேர்மங்களுக்கு விகிதாசாரம் இல்லை:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia