சோடியம் தெக்கினீடேட்டு(V) (Sodium technetate(V)) என்பது NaTcO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். பெரோவ்சிகைட்டு எனப்படும் கால்சியம் தைட்டானியம் ஆக்சைடு கனிமம் என இது வகைப்படுத்தப்படுகிறது.[2]
தயாரிப்பு
தெக்கினீசியம் சோடியம் பெர்தெக்னீடேட்டுடன் சோடியம் ஆக்சைடைச் சேர்த்து இணை-சூடாக்கல் மூலம் வேதி வினைக்கு உட்படுத்தினால் சோடியம் தெக்கினீடேட்டு(V) உருவாகும்.[3] உயர் வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்பட்டால் சிதைவு வினையும் நிகழும்.
சோடியம் தெக்கினீடேட்டு(V) Na2O–Tc2O5 என்ற அமைப்பின் உறுப்பினரான இது ஒரு கருப்பு நிறத் திண்மப்பொருளாகும். 800 °செல்சியசு வெப்பநிலை (1,470 °பாரங்கீட்டு; 1,070 கெல்வின்) வெப்பநிலை வரை இச்சேமம் நிலைப்புத்தன்மையுடன் காணப்படும்.[1]
Keller, C.; Kanellakopulos, B. (April 1965). "Ternäre oxide des drei-bis siebenwertigen technetiums mit alkalien". Journal of Inorganic and Nuclear Chemistry27 (4): 787–795. doi:10.1016/0022-1902(65)80438-9.
Kanellakopulos, Basil. The ternary oxide of 3-to 7-valent technetium with alkalis. (1964), (AEC Accession No. 31424, Rept. No. KFK-197), pg. 73.