தெக்கினீசியம்
தெக்கினீசியம் (டெக்னீசியம், Technetium)[1] அல்லது பசகன் அல்லது செய்தனிமம் என்பது Tc என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு தனிமம் ஆகும். தெக்கினீசியத்தின் அணு எண் 43 மற்றும் இதனுடைய அணுக்கருவில் 55 நியூட்ரான்கள் உள்ளன. எடை குறைவான இத்தனிமத்தின் ஓரிடத்தான்கள் அனைத்தும் கதிரியக்கப் பண்பு கொண்டவையாகும். இவற்றில் முழு அயனியாக்க நிலையில் உள்ள 97Tc ஓரிடத்தானைத் தவிற மற்றவை அனைத்தும் நிலைப்புத் தன்மை இல்லாதவையாகும் [2]. கிட்டத்தட்ட அனைத்து ஓரிடத்தான்களும் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகின்றன. புவியின் மேலோட்டில் 18000 டன் தெக்கினீசியம் மட்டுமே எந்த காலத்திலும் காணப்படுகிறது. பொதுவான மூலமான தோரியம் தாதுக்கள் மற்றும் யுரேனியம் தாதுக்கள் தன்னிச்சையாக சிதைவடைந்து இயற்கையாகத் தோன்றும் தெக்கினீசியம் தோன்றுகிறது. மாலிப்டினம் தாதுக்கள் நியூட்ரான் ஈர்ப்பு அணுக்கருச் செயல்முறை மூலமாகவும் இது தோன்றும். வெள்ளிய சாம்பல் நிறத்தில் உள்ள இந்த படிக இடைநிலைத் தனிமம் தனிமவரிசை அட்டவணையின் 7 ஆவது நெடுங்குழுவில் மாங்கனீசுக்கும் இரேனியத்திற்கும் இடையில் வைக்கப்பட்டுள்ளது. தெக்கினீசியத்தின் வேதிப் பண்புகளும் இவ்விரு தனிமங்களின் வேதிப் பண்புகளுக்கு இடைப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. 99Tc என்ற ஓரிடத்தானே இயற்கையில் தோன்றும் மிகப் பொதுவான தெக்கினீசியம் ஆகும். டெக்னீசியத்தின் பல பண்புகள் திமித்ரி மெண்டலீவ் என்ற வேதியியலாளரால் தனிமம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே கணிக்கப்பட்டன. மெண்டலீவ் தனது தனிமவரிசை அட்டவணையில் ஒரு இடைவெளியைக் குறிப்பிட்டு, கண்டுபிடிக்கப்படாத அத்தனிமத்திற்கு தற்காலிகமாக ஏகாமாங்கனீசு (Em) என்ற பெயரைக் கொடுத்திருந்தார். 1937 ஆம் ஆண்டில், தெக்கினீசியம் குறிப்பாக தெக்கினீசியம்-97 என்ற ஐசோடோப்பு செயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட முதன்மையாக செயற்கை தனிமம் ஆனது. செயற்கை தனிமம் என்ற பொருளில் கிரேக்க மொழியில் இதன் பெயர் தெக்கினீசியம் என்று வைக்கப்பட்டது. எலும்புப் புற்றுநோய் கண்டறிதல் போன்ற பலவகையான நோயறிதல் சோதனைகளுக்கு அணுக்கரு மருத்துவத்தில் ஒரு குறுகிய கால காமா கதிர்-உமிழும் தெக்கினீசியம்-99 இன் அணுக்கரு ஓரிடத்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த அணுக்கருவின் கீழ் நிலை, தெக்கினீசியம்-99, காமா-கதிர் இல்லாத பீட்டா துகள்களின் மூலமாக பயன்படுத்தப்படுகிறது. வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் நீண்டகால ஆயுள் கொண்ட தெக்கினீசியம் ஐசோடோப்புகள் அணு உலைகளில் யுரேனியம் -235 தனிமத்தை அணுக்கரு பிளவு மூலம் தயாரிக்கப்படுகின்றன, மேலும் அவை அணு எரிபொருள் தண்டுகளிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. தெக்கினீசியத்தின் எந்த ஓரிடத்தானும் 4.21 மில்லியன் ஆண்டுகளென்ற (தெக்கினீசியம்-97) நீண்ட அரை வாழ்வுக் காலத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதால் விண்மீன்களால் கன உலோகங்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதை நிருபிக்க 1952 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட செம்பெருமீன் அல்லது சிவப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் பெரிய விண்மீன்களில் கண்டறியப்பட்ட தெக்கினீசியம் உதவியது. வரலாறுஅணு எண் 43 கொண்ட தனிமத்தின் தேடல்1860 ஆம் ஆண்டுக்கும் 1871 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வேதியியலாளர் திமித்ரி மெண்டலீவ் முன்மொழிந்த தனிமவரிசை அட்டவணையின் ஆரம்ப வடிவங்களில் மாலிப்டினம் (42) மற்றும் ருத்தேனியம் (44) ஆகிய தனிமங்களுக்கு இடையில் ஓர் இடைவெளி இருந்தது. 1871 ஆம் ஆண்டில் விடுபட்டிருந்த இந்த தனிமம் மாங்கனீசுக்குக் கீழே உள்ள வெற்று இடத்தை ஆக்கிரமித்து இதேபோன்ற இரசாயன பண்புகளைக் கொண்டிருக்கும் என்று மெண்டலீவ் கணித்தார். முன்னறிவிக்கப்பட்ட தனிமம் அறியப்பட்ட தனிமமான மாங்கனீசிலிருந்து ஒரு இடம் கீழே இருப்பதால், மெண்டலீவ் அதற்கு ஏகாமாங்கனீசு என்ற தற்காலிகப் பெயரைக் கொடுத்தார் [3]. ஆரம்பகால தவறான அடையாளங்கள்பல ஆரம்பகால ஆராய்ச்சியாளர்கள், தனிமவரிசை அட்டவணை வெளியிடப்படுவதற்கு முன்னும் பின்னும் விடுபட்டிருந்த தனிமத்தைக் கண்டுபிடித்து பெயரிடுவதற்கு முதலில் ஆர்வமாக இருந்தனர். அட்டவணையில் அதன் இருப்பிடம் கண்டுபிடிக்கப்படாத பிற தனிமங்களை விட இதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் என்ற எண்ணத்தை விதைத்தது.
மறுக்க முடியாத முடிவுகள்செருமானிய வேதியியலாளர் வால்ட்டர் நோத்தாக், ஓட்டோ பெர்க் மற்றும் ஐடா டாக்கே ஆகியோர் அணுஎண்கள் 75 மற்றும் 43 கொண்ட தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக 1925 ஆம் ஆண்டு அறிவித்தார்கள். அணு எண் 43 கொண்ட தனிமத்திற்கு மசூரியா எனப்பெயரிட்டனர். தற்போது போலந்திலுள்ள புருசியா மாநிலத்தின் மசூரியா மண்டலத்தில் கண்டறியப்பட்டதால் இப்பெயர் சூட்டப்பட்டது. இங்குதான் வால்ட்டர் நோத்தாக்கின் குடும்பம் தோன்றியது. இக்குழுவினர் கூலும்பைட்டு கனிமத்தை எலக்ட்ரான் கற்றை ஒன்றை பயன்படுத்தி மோதச்செய்து எக்சுகதிர் உமிழ்வு அலைமாலை நிரல் சோதனையில் இத்தனிமத்தை உய்த்தறிந்தனர் [6]. உற்பத்தி செய்யப்பட்ட எக்சு-கதிர்களின் அலைநீளம் 1913 இல் என்றி மோசுலியால் பெறப்பட்ட ஒரு வாய்ப்பாட்டில் அணு எண்ணுடன் தொடர்புடையதாக இருந்தது. தனிமம் 43 ஆல் உருவாக்கப்பட்ட அலைநீளத்தில் இம் மங்கலான எக்சு கதிர் சமிக்ஞ்சையை கண்டுபிடித்த்தாகக் குழு கூறியது. பிற்கால பரிசோதனையாளர்களால் இக் கண்டுபிடிப்பைப் பிரதிபலிக்க முடியவில்லை, மேலும் இது பல ஆண்டுகளாக ஒரு பிழையாகவே நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் 1933 ஆம் ஆண்டில் கூட இத்தனிமங்களின் கண்டுபிடிப்பு பற்றிய தொடர் கட்டுரைகள் அணு எண் 43 தனிமத்திற்கு மசூரியம் என்ற பெயரை மேற்கோள் காட்டி வந்தன. 1925 குழு உண்மையில் தனிமம் அணு எண் 43 தனிமத்தை கண்டுபிடித்ததா என்பது இன்னும் விவாதத்தில் உள்ளது [7][8]. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia