தெக்கினீசியம்(IV) குளோரைடு
தெக்கினீசியம்(IV) குளோரைடு (Technetium(IV) chloride) என்பது TcCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள ஒரு வேதிச் சேர்மமாகும். இது தெக்கினீசியம் மற்றும் குளோரின் தனிமங்கள் சேர்ந்து உருவாகிறது. மற்ற ஆவியாகும் குளோரைடுகளில் இருந்து தெக்கினீசியத்தைப் பிரித்தெடுக்கும் ஒரு முறைகாக ஆய்வுகள் நடைபெற்றபடி உள்ளன[2]. தெக்கினீசியம்(IV) குளோரைடின் கூழ்மக் கரைசல்கள் காமா கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்டால் அவை தெக்கினீசியம்(VII) அயனிகளாக உருவாகின்றன[3] டெக்னீசியம் முக்குளோரைடுதெக்கினீசியம் முக்குளோரைடு முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் அறியப்பட்டது. இருதெக்கினீசியம்(III) நான்கசிட்டேட்டு மற்றும் ஐதரசன் குளோரைடு வளிமத்துடன் 300 பாகை வெப்பநிலையில் வினைபுரியும் போது கருப்பு நிறத்திண்மமாக உருவாகிறது. இதில் முக்கோண வடிவ Tc3Cl9 அலகுகள் C3V சீரொழுங்குடன் ஒவ்வொரு Tc அணுவும் அடுத்துள்ள இரண்டு Tc அணுக்கள் மற்றும் 5 குளோரைடு ஈனிகளுடன் ஒருங்கிணைந்துள்ளன. Tc-Tc பிணைப்பின் நீளம் 2.44 ஆங்ஸ்டிராம் அலகு ஆகும்[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia