தெக்கினீசியம்(VII) ஆக்சைடு
டெக்னீசியம்(VII) ஆக்சைடு (Technetium(VII) oxide) என்பது Tc2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். மஞ்சள் நிறத்துடன் எளிதில் ஆவியாகக் கூடிய இச்சேர்மத்தை இரும உலோக ஆக்சைடிற்கு ஒர் அரிய உதாரணமாகக் குறிப்பிடலாம். ருத்தேனியம் நான்காக்சைடு (RuO4), ஆசுமியம் நான்காக்சைடு (OsO4), மற்றும் நிலைப்புத் தன்மையற்ற மாங்கனீசு(VII) ஆக்சைடு (Mn2O7) ஆகியனவை பிற உதாரணங்களாகும். மத்திய சமச்சீர் மூலை – பங்கிட்ட இரு – நான்முக வடிவ கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இவ்வடிவில் விளிம்பாகவும் பாலமாகவும் உள்ள Tc-O பிணைப்புகள் முறையே 167 பை.மீ மற்றும் 184 பை.மீ அளவுகளில் உள்ளன. Tc-O-Tc பிணைப்புகளின் பிணைப்புக் கோணம் 180 0 ஆகும்[1]. டெக்னீசியத்தை 450 முதல் 500 0 செ வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் டெக்னீசியம் ஆக்சிசனேற்றம் அடைந்து டெக்னீசியம்(VII) ஆக்சைடு உருவாகிறது[2].
பெர்டெக்னிக் அமிலத்தின் நீரிலி வடிவமான இது சோடியம் பெர்டெக்னேட்டு தயாரிப்பதற்கான முன்னோடி சேர்மமாகவும் இருக்கிறது.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia