தெய்வத்ன பிராமணர்
தெய்வத்ன பிராமணர்கள் (Daivadnya Brahmins) என்பவர்கள் கொங்கணி மக்கள் மற்றும் கொங்கன் மண்டலத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்து பிராமண சாதிகளின் துணைக்குழுவாகும். முக்கியமாக கோவா, தாமன், கனரா (கடலோர கர்நாடகா), கடலோர மகாராட்டிரா, கேரளா போன்ற பகுதிகளில் வசிக்கின்றனர். [1] இவர்கள் அவை பொதுவாக சேத் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த வார்த்தை சிரேத்தா அல்லது சிரேட்டின் என்ற வார்த்தையின் மறு வடிவமாகும். [2] [3] கோவாவில் உள்ள இச்சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான பழைய தலைமுறையினர் தங்களை சேத்தி பாமன் என்று அழைக்கின்றனர். இது சிரேத்தி பிராமணரின் மறு வடிவமாகும். இவர்கள் பெரும்பாலும் சமஸ்கிருதத்தில் சுவர்ணகாரா என்றும் மராத்தியில் சோனார் என்றும் அழைக்கப்படுகிறார்கள். குறிப்பிடத்தக்கவர்கள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia