தேவகி கோபிதாசு
தேவகி கோபிதாசு (Devaki Gopidas) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1] தேவகி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1962 - 1968 ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்யசபாவில் கேரளாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2][3][4][5] கல்விதன்னுடைய பள்ளிப் படிப்பை கோட்டயத்திலும், கல்லூரிக் கல்வியை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியிலும் முடித்தார். கல்லூரியில் படிக்கும் போது காங்கிரசு கட்சியில் சேர்ந்து அரசியலில் நுழைந்தார். பின்னர் கொல்கத்தாவில் சட்டம் பயின்றார். தனிப்பட்ட வாழ்க்கை1918 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி கோட்டயம் மாவட்டம் காரப்புழாவில் ஓர் ஈழவர் குடும்பத்தில் அரங்கசேரி நாராயணன் மற்றும் டி.கே.நாராயணி ஆகியோருக்கு மகளாக தேவகி கோபிதாசு பிறந்தார்.[6]ஆலப்புழா மாவட்டம் வேழப்பிரா கிராமத்தைச் சேர்ந்த கோபிதாசு என்பவரை திருமணம் செய்து கொண்டு கொல்கத்தாவில் குடியேறினார். இறப்பு1973 ஆம் ஆண்டு மே மாதம் 31 அன்று 65 பேருடன் பறந்த இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 பாலம் விமான நிலையத்தை அண்மித்த போது விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் பயணம் செய்து உயிரிழந்த 48 பேரில் இவரும் ஒருவராவார்.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia