தேவ மாணிக்கியா
தேவ மாணிக்கியா (Deva Manikya) இ. 1563), 1520 முதல் 1530 வரை திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார். பிரபலமான தான்ய மாணிக்கியாவின் மகனான இவர் ஆரம்பத்தில் தனது தந்தையின் இராணுவ வெற்றிகளின் பாரம்பரியத்தைத் தொடர்ந்தார. இருப்பினும் இறுதியில் இவர் குறைவான வெற்றியையே அடைய முடிந்தது. மதத்தின் மீது ஆர்வமுள்ள மன்னரான இவர் தனது ஆன்மீக குருவால் திட்டமிடப்பட்ட ஒரு சதித்திட்டத்தில் இறுதியில் கொல்லப்பட்டார். ஆட்சிதான்ய மாணிக்கியாவின் இளைய மகனான தேவ மாணிக்கியா 1520 இல் தனது அண்ணன் துவஜா மாணிக்கியாவின் மரணத்திற்குப் பிறகு அரியணை ஏறினார். அதே ஆண்டு, இவர் புலுவா இராச்சியத்தின் (இப்போது வங்காளதேச மாவட்டமான நவகாளியில் அமைந்துள்ளது) மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினார். சோனார்கான் நகரமும் இதேபோல் கைப்பற்றப்பட்டது. மேலும் தேவா சிட்டகொங்கின் மீது ஆதிக்கம் செலுத்தியதாகவும் நம்பப்படுகிறது. இருப்பினும், இவரது போட்டியாளரான வங்காள சுல்தான் நஸ்ரத் ஷா விரைவில் பிந்தைய பகுதியை மீண்டும் கைப்பற்றியதில் இருந்து இவரது வெற்றிகள் தற்காலிகமானவை என்பதை நிரூபிக்கப்பட்டன. பல ஆண்டுகளுக்குப் பிறகு தேவாவின் மகன் தனது சொந்த வெற்றியைக் கொண்டாடியதால், சோனார்கானும் ஒரு கட்டத்தில் கைவிட்டுப் போனது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.[2] இவர் ஆழ்ந்த பக்தி கொண்ட தனிமனிதராக இருந்தார். மேலும், இந்து சமயத்தின் சக்தி பாரம்பரியத்தை பின்பற்றினார். புலுவா மற்றும் சிட்டகொங்கில் வெற்றி பெற்ற பிறகு, தேவா துராசரா (இன்றைய சீதாகுண்டத்தில் அமைந்துள்ளது) நீரூற்றுக்கு புனித யாத்திரை மேற்கொண்டார். மேலும் அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் நாணயங்களையும் வெளியிட்டார்.[3] இவர் ஒருமுறை பதினான்கு கடவுள்களுக்கு பலியாக அடிமைகளை அளித்ததாக ஒரு கதை கூறுகிறது. இருப்பினும், மகாதேவன் இராணுவத்தின் சிறந்த தளபதிகளை காணிக்கையாகக் கோரினார் என்று தலைமைப் பூசாரி இவருக்குத் தெரிவித்தபோது, தேவா தனது எட்டு தளபதிகளையும் எரித்துவிட்டார்.[4] தேவா இறுதியில் 1530 இல் தனக்கு எதிராக ஒரு சதியைத் தொடங்கிய லட்சுமிநாராயணன் என்ற தாந்த்ரீக மைதிலி பிராமணரின் சீடரானார். இறுதியில் இவரது ராணிகளில் ஒருவருடன் இணைந்து பணியாற்றிய லட்சுமிநாராயணனாலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த ராணியின் மகன், இரண்டாம் இந்திர மாணிக்யா, அரியணையில் அமர்த்தப்பட்டார். இருப்பினும் பிராமணரான லட்சுமிநாராயணனே ராச்சியத்தில் உண்மையான அதிகாரத்தை வைத்திருந்தார். இது 1532 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது, லட்சுமிநாராயணன் கொல்லப்பட்டு, அரியணையை தேவாவின் இளைய மகன் இரண்டாம் விசய மாணிக்கியா எடுத்துக் கொண்டார்.[5] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia