புலுவா இராச்சியம்
புலுவா இராச்சியம் ( Kingdom of Bhulua) என்பது வங்காளதேசத்தின் இன்றைய நவகாளி பகுதியை உள்ளடக்கிய ஒரு ராச்சியமாகவும் பின்னர் ஜமீந்தாரியாகவும் இருந்தது. மிதிலையின் இந்து ராஜபுத்திரரான பிஷ்வம்பர் சூர் என்பவர் இதை நிறுவியதாகத் தெரிகிறது. 15 ஆம் நூற்றாண்டில் திரிபுரா இராச்சியத்தின் படையெடுப்பால் இராச்சியம் வீழ்ந்தது. மேலும் முகலாயர்களிடம் தோற்ற பிறகு ஜமீந்தாரி பகுதியாகக் குறைக்கப்பட்டது. ராச்சியத்தின் பெரும்பாலான நிலங்கள் மேகனா ஆற்றால் அரிக்கப்பட்டன. தோற்றம்மிதிலையின் ஆதி சூர் என்பவரின் ஒன்பதாவது மகனான பிஷ்வம்பர் சூர், இராஜபுத்திர வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், மிதிலைப் பகுதியுடன் பண்பாட்டுத் தொடர்பைத் தொடர்ந்து பேணி வந்ததாகவும் மரபுகள் கூறுகின்றன. இருப்பினும், காயஸ்தர் பின்னணியில் இருந்து ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார், வம்சம் இறுதியில் காயஸ்தர்கள் என்று அடையாளம் காண வழிவகுத்தது. திரிபுராவின் அடிமை ஆட்சி1520 இல், திரிபுராவின் தேவ மாணிக்கியா[1] புலுவாவைக் கைப்பற்றினார். இருப்பினும் இவர்கள் சிகாலம் ஓரளவு சுயாட்சியைப் பேணி வந்தனர். புலுவாவின் ஏழாவது மன்னர் மாணிக்கியா என்ற பட்டத்தைப் பயன்படுத்தினார். மேலும் திரிபுராவின் மன்னர்களுடன் நல்லுறவைக் கொண்டிருந்தார். திரிபுரா மன்னர்களின் முடிசூட்டு விழாவின் போது அவர்களின் நெற்றியில் அரச முத்திரை வைக்கும் பெருமை புலுவா மன்னர்களுக்கு வழங்கப்பட்டது. < பிஷ்வம்பர் சூர் வம்சம் இறுதியில் முகலாய ஆட்சியின் கீழ் நிலப்பிரபுத்துவ நில உரிமையாளர்களாக குறைக்கப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில், திரிபுராவின் யசோதர் மாணிக்கியா புலுவா மன்னர்களுக்கு எதிராக ஒரு தாக்குதலை நடத்தினார். இது இறுதியில் பெரும் தோல்வியை விளைவித்தது. [2] 1661 ஆம் ஆண்டில், 1782 இன் முகலாய ஆவணம் ராஜா கீர்த்தி நாராயணன் மற்றும் விஜய் நாராயண் குத்வா ஆகியோரைபுலுவாவின் ஜமீந்தார்கள் என்றும் குறிப்பிடுகிறது. [3] ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, புலுவா தோட்டத்தின் ஒரு பகுதி பைக்பாராவின் ஜமீந்தாரான கங்கா கோவிந்த சிங்குக்கு விற்கப்பட்டது. 1833 ஆம் ஆண்டில், நிலுவைத் தொகையின் காரணமாக முழுத் தோட்டமும் விற்கப்பட்டது. பின்னர் துவாரகநாத் தாகூர் அதை வாங்கினார். அவர் இதை இறுதியில் பைக்பாராவின் ராணி காத்யாயனிக்கு விற்றார். இருபதாம் நூற்றாண்டில், ஜான் வெப்ஸ்டர், ஸ்ரீராம்பூரில் "சுர்" என்ற பெயரை வைத்திருந்த மக்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இது முந்தைய பிஷ்வம்பர் சூர் வம்சத்துடனான உறவைக் குறிக்கிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia