நங்கவரம் (ஆங்கிலம்:Nangavaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
நான்கு வருவாய் கிராமங்கள் வடக்கு-(1,2) தெற்கு-(1,2) உள்ளன.
இவ்வூர் சோழர் காலத்தில் நங்கை பிரமதேயமான அரிஞ்சிகைச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.[1]
தொழில்கள்
காவிரி ஆறு அருகில் இருப்பதால் விவசாயம் முதன்மைத் தொழிலாகும். உய்யக்கொண்டன், கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் பாசனம் பெருகிறது.மண்வளமும் நீர்வளமும் இருப்பதால் [[வாழை], [கோரை புல்],[ கரும்பு], [நெல் ]]பயிர்கள் அலங்கரிக்கும். குறிப்பாக நெல் இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. குளித்தலைக்கு மேற்கே லாலாப்பேட்டை என்ற ஊரிலிருந்து கிழக்கே நங்கவரம் வரையில் பகுதிகளில் பயிரிடப்படும் பல்வேறு தரப்பட்ட நெல் ரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. தமிழகத்தின் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அதிகம் ஏற்றுமதி ஆகிறது.
அமைவிடம்
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கரூர்- 60 கி.மீ., குளித்தலை-18 கி.மீ., திருச்சிராப்பள்ளி-20 கி.மீ., பெருகமணி இரயில் நிலையம் -2.5 கி.மீ., முக்கொம்பு சுற்றுலாத்தலம்-6 கி.மீ. தொலைவில் நங்கவரம் பேரூராட்சி அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
18 வார்டுகள் கொண்ட நங்கவரம் பேரூராட்சி குளித்தலை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]
[[ நங்கவரம் பே
ரூராட்சி]]|
வார்டு |
பகுதிகள்!
|
1 |
அனஞ்சனூர் குடித்தெரு,
அனஞ்சனூர் ஆதிதிராவிடர் காலனி,
கோவிந்தனூர் ஆதிதிராவிடர் காலனி,
மேளக்காரத் தெரு,
நாப்பாளையம்.
|
2 |
ஆசாரித்தெரு,
சந்துத் தெரு,
நங்கவரம் வடக்குத்தெரு,
கஸ்பா வெள்ளாளத்தெரு ,
கீழ அக்ரஹாரம்,
மேல அக்ரஹாரம்,
கம்மாளத்தெரு,
வெள்ளாளர் தெரு,
சோழியர் தெரு,
வண்ணாரத்தெரு,
தங்கசாலைத் தெரு,
பெருமாள் கோயில் தெரு,
பங்களா தெரு,
போஸ்ட் ஆபிஸ் தெரு.
|
3 |
சந்துத் தெரு,
காளியம்மன்கோவில் தெற்குப் பகுதி,
தமிழ்ச்சோலை கிழக்குப் பகுதி,
கஸ்பா குடியானத்தெரு,
தமிழ்ச்சோலை நடுப் பகுதி.
|
4 |
தமிழ்ச்சோலை மேற்புறம்,
மந்தை,
காமராஜ் நகர்.
|
5 |
வாரிக்கரை,
தமிழ்சோலை மேற்குபகுதி,
தென்நகர் ,
விநாயகபுரம் .
|
6 |
மேலக்குறிச்சி ,
கீழக்குறிச்சி ,
கீழக்குறிச்சி காலனி .
|
7 |
தென்கடைகுறிச்சி சாலைமேடுகளத்துவீடுகள்.
|
8 |
பூனாச்சிப்பட்டி ,
வடக்கு மாடுவிழுந்தான்பாறை (வடக்கு) ,
குஞ்சாமுடக்கு ,
தெற்கு மாடுவிழுந்தான்பாறை
|
9 |
புதுக்குளம் ,
தாட்கோகாலனி ,
|
10 |
தாட்கோகாலனி ,
வி.ஆர்.ஒ.காலனி தெரு ,
|
11 |
நச்சலூர்ஆதிதிராவிடர்கீழத்தெரு,
நச்சலூர் ஆதிதிராவிடர்தெற்குதெரு.
|
12 |
புதுப்பாளையம் ,
நச்சலூர் ஈ.பி ஆபீஸ் ,
புரசம்பட்டி,
நச்சலூர் கிழக்கு ,
|
13 |
நச்சலூர் மேலத்தெரு ,
காந்திநகர் ,
நச்சலூர் காமராஜ் காலனி மேற்கு ,
நச்சலூர் புக்குழி .
|
14 |
ஆண்டிப்பட்டி ,
கருப்பண்ணமேடு ,
உப்பாறு ,
மேல்நந்தவனக்காடு .
|
15 |
சவாரிமேடு ,
பாறைக்களம் ,
பாதியகாவல்காடு ,
காளியம்மன்கோவில் மேடு ,
கீழ சுக்காம்பட்டி (கிழக்கு).
|
16 |
மேல்நங்கவரம் குடிதெரு ,
கருங்காடு .
|
17 |
மேல் நங்கவரம் மேட்டுத்தெரு ,
ஆதிதிராவிடர் காலனி ,
கருப்பண்ணசாமி கோவில்தெரு,
ஆதிதிராவிடர்அம்மன்கோவில்தெரு,
|
18 |
நச்சலூர் ,
வ.உ.சி. நகர் ,
வள்ளுவர் நகர் ,
மேலத்தெரு ,
|
சிற்றூர்கள்
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,477 வீடுகளும், 17,629 மக்கள்தொகையும் கொண்டது.[3] [4]
ஆதாரங்கள்
- ↑ "நங்கவரம் சுந்தரராஜப் பெருமாள் கோயில் கட்டமைப்பும் கல்வெட்டுகளும்". Retrieved சனவரி 29, 2008.
- ↑ [பேரூராட்சியின் இணையதளம்]
- ↑ Nangavaram Population Census 2011
- ↑ Nangavaram Town Panchayat
|