நஞ்சுப் படர்க்கொடி

நஞ்சுப் படர்க்கொடி
இலையுதிர் காலம்
Photograph of green poison ivy leaves
பசுமைக் காலம் - ஒட்டாவா, ஒன்றாரியோ

Secure  (NatureServe)[2]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
தாவரம்
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. radicans
இருசொற் பெயரீடு
Toxicodendron radicans
(L.) Kuntze
Toxicodendron radicans பரவல் - அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா
வேறு பெயர்கள்
  • Rhus radicans L.
  • Rhus verrucosa Scheele, syn of subsp. verrucosum

நஞ்சுப் படர்க்கொடி (Poison ivy, தாவரவியல் பெயர்: Toxicodendron radicans) என்தன் பண்டைய பெயர்கள் ரஸ் டாக்ஸிகோடென்ட்ரான் , ரஸ் ரேடிகான்ஸ்) [3] ]முந்திரி குடும்பம் என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு செடியாகும். ஆனால், இக்கொடி உண்மையான படர்க்கொடி (ஹெடெரா) அல்ல. எண்ணெய்ச் சுரப்பியுள்ள ஒரு காட்டுப் படர்க்கொடி வகையாகும். இது பலருக்கும் சருமத்தில் அரிப்பையும், வெடிப்பையும் உருவாக்கும். உருஷியால் என்னும் ஒரு சரும எரிச்சலை ஏற்படுத்தும் இயல்புடையது ஆகும்.

வளர்விடமும் எல்லைகளும்

நஞ்சுப் படர்க்கொடி கனடாவின் கரையோர மாநிலங்கள், கியூபெக், ஆன்டாரியோ ஆகியவை உள்ளிட்ட, வட அமெரிக்கா முழுவதும், வட டகோடாவைத் தவிர ராக்கீஸின் கிழக்கில் உள்ள அனைத்து ஐக்கிய மாநில நாடுகள், மெக்ஸிகோவின் மலை நிறைந்த பகுதிகள் மற்றும் அவற்றைச் சுற்றி1,500 m (4,900 அடி) (காண்க: காகுவிஸ்டில் அல்லது காகிஸ்டில்- நஹாட்1 சொல்) வளர்கின்றன; இவை மரங்கள் நிறைந்த பகுதியில், குறிப்பாக விளிம்புப் பகுதிகளில் வழக்கமாகக் காணப்படுகின்றன. வெளிப்படையான கற்கள் நிறைந்த பகுதிகள் மற்றும் திறந்தவெளிகள், பாதிப்புக்குள்ளான பகுதிகள் ஆகியவற்றிலும் இவை வளர்கின்றன. இது சிறிதளவே நிழலில் வளரக்கூடிய தன்மையுடையது என்றாலும், காட்டில் கீழே படரும் ஒரு செடியாகவும் வளர்கிறது.[3] இந்தச் செடி, புதிய இங்கிலாந்து, மத்திய-அட்லாண்டிக், தென்கிழக்கு ஐக்கிய நாடுகளின் புறநகர் மற்றும் புறநகர் தாண்டிய பகுதிகளில் மிகச் சாதாரணமாக உள்ளது. இதை ஒத்த இனமான, பாய்ஸன்-ஓக் மற்றும் டாக்ஸிகோடென்ட்ரான் ரிட்பெர்கி ஆகியவை மேற்கு வட அமெரிக்காவில் காணப்படுகின்றன. நஞ்சுப் படர்க்கொடி வளரக் கூடிய இடங்களின் உயர வரம்பானது, வெவ்வேறு இடங்களில் வேறுபட்டதாக இருப்பினும், இது1,500 m (4,900 அடி)க்கு மேல் உயரமான இடங்களில் அரிதாகவே வளர்கிறது.[3] இந்தச் செடிகள் புதர் போல 1.2 மீட்டர்கள் (3.9 அடிகள்) உயரத்திற்கு, 10–25 cm (3.9–9.8 அங்) உயரத்திற்கு நிலப்படுகை போலவோ, அல்லது பல்வேறு ஆதாரங்களுடன் பற்றிக்கொண்டு ஏறும் கொடியாகவோ வளர்கின்றன. பழைய பற்றுக்கொடிகள் உறுதியான துணை வலுவுகளுடன், முதற்பார்வையில் மரத்தின் பெருங்கிளைகள் என தவறாக எண்ணக் கூடிய வண்ணம் பக்கவாட்டுக் கிளைகளை வெளியிடுகின்றன.

இது பாலைவனங்களிலும் உலர்ந்த நிலைகளிலும் வளர்வதில்லை என்றாலும், மண்ணின் ஈரத்தன்மைக்கு இது குறிப்பான மிகு உணர்வு கொண்டிருப்பதில்லை. இது பல்வகை மண் வகைகளிலும், மண்ணின் பிஹெச் 6.0 (அமிலத்தன்மை)யிலிருந்து 7.9 வரை (மிதமான காரத்தன்மை) இருப்பதிலும் வளர்கின்றது. இது, பருவகால வெள்ளப் பகுதிகளிலும், சற்றே உப்பு கொண்ட நீர்நிலை இடங்களிலும் வளரக் கூடியது.[3]

இது ஐரோப்பியர்கள் முதலில் வட அமெரிக்காவிற்குள் வந்தபோது இருந்ததை விட தற்பொழுது மேலும் அதிகம் காணப்படுகிறது.காடுகளிலும், மேம்படுத்தாத நிலங்களுக்கு அருகில், முன்னேறி வரும் கட்டிடத் தொழிலானது "விளிம்பு சாயல்களை"த் தோற்றுவித்து, இத்தகைய இடங்களில், நஞ்சுப் படர்க்கொடி பரந்தகன்ற செழுமையான கொடிகளாய் வளர உதவுகிறது. இது ஐக்கிய நாடுகளின் மினசோட்டா, மிச்சிகன், கனடாவின் மாநிலமான ஆன்டேரியோ ஆகிய இடங்களில் நச்சுத்தன்மை வாய்ந்த களைச்செடி உள்ளதாக அறியப்பட்டுள்ளது.

இந்த நஞ்சுப் படர்க்கொடி செடியும் அதன் இனச் செடிகளும் ஐரோப்பாவில் ஏறத்தாழ அறியப்படாமலேயே உள்ளன.

விரிவுரை

வழக்கமான சிவப்பு "உரோமங்களுடன்" நஞ்சுப் படர்க்கொடி பற்றுக்கொடி (இலைகளைப் போலவே கொடிகளும் மனிதர்களுக்கு மிகுந்த நச்சுத்தன்மையுடையவை)

நஞ்சுப் படர்க்கொடிச் செடியின் உதிரக்கூடிய இலைகள் மூன்று வாதுமை-வடிவ சிற்றிலைகளுடன் முச்சிற்றிலை வடிவமாய் காணப்படுகின்றன.[3] இலையின் நிறம் இளம் பச்சையிலிருந்து (சாதாரணமாக இளம் இலைகள்) அடர்ந்த பச்சை வரை (முதிர்ந்த இலைகள்) உள்ளன. உதிரும் பொழுது அவை ஒளிரும் சிவப்பு நிறமாக மாறுகின்றன; எனினும் இலைகள் விரிவடையும் போது சிவப்பாகவும், முதிரும்போது பச்சையாக மாறியும், பின்னர் உதிரும்பொழுது மறுபடி சிவப்பாக, செம்மஞ்சள் அல்லது மஞ்சளாக மாறுவதாகவும் வேறு சில தோற்றுவாய்கள் உரைக்கின்றன. முதிர்ந்த இலைகளின் சிற்றிலைகள் சற்றே பளபளப்பாக இருக்கின்றன. இந்தச் சிற்றிலைகள் மூன்றிலிருந்து 12 செமி வரையிலும், அரிதாக 30செமி வரையிலும், நீளம் கொண்டுள்ளன. ஒவ்வொரு சிற்றிலையிலும் அதன் விளிம்புகளில் குறைந்த அளவு பற்களே உள்ளன; அல்லது அவை இல்லாமல் இதன் மேற்பரப்பானது வழவழப்பாக அமைந்துள்ளது. மேலே பற்றி எழும்பும் கொடியில் சிற்றிலைக் கொத்துக்கள் ஒன்று விட்டு ஒன்றாக இருக்கின்றன; மேலும் இந்தச் செடியில் முட்கள் இருப்பதில்லை. அடிமரத்தைப் பற்றி வளரும் கொடி வகைகள் உயர்ந்த வேர்க்கால்கள் மூலமாக அவற்றோடு இறுக ஒட்டியிருக்கின்றன.[4] இந்தக் கொடி வகைகள் வெளிப்புற வேர்களை உருவாக்குகின்றன, அல்லது இந்தச் செடி வேர்த்தண்டுக்கிழங்குகளிலிருந்து அல்லது வேர்த்தலைகளிலிருந்தும் பரவக்கூடும். நஞ்சுப் படர்க்கொடிச் செடியின் பால் போன்ற சாறானது காற்றில் வெளிப்பட்ட பின்பு கருமையடைகிறது.

நஞ்சுப் படர்க்கொடி தாவர மற்றும் பாலின ஆகிய இரு முறைகளிலும் பரவுகிறது. நஞ்சுப் படர்க்கொடி ஒரு இரு பால் செடியாகும்; இதில், மே மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரை மலர்கள் உருவாகின்றன. மஞ்சள் அல்லது பச்சையான-வெள்ளை மலர்கள் தெளிவாகப் புலப்படாதவையாகவும், இலைகளுக்கு மேல் எட்டு செமீ உயரத்தில் கொத்துக்களாகவும் அமைகின்றன. பெர்ரி கனியைப் போன்ற, ஆகஸ்ட் துவங்கி நவம்பர் மாதம் வரை முதிர்வதான இதன் உள்ளோட்டுச் சதைக்கனி, சாம்பல்-வெண்மை நிறத்தைக் கொண்டிருக்கும்.[3] இதன் கனிகள், சில பறவைகள் மற்றும் சில விலங்குகளுக்கு மிகவும் உவப்பான குளிர்கால உணவாகும். இதன் விதைகள் பெரும்பாலும் விலங்குகளால் பரப்பப்படுகின்றன; இவை அவற்றின் செரிமானப்பாதை வழியாக வெளிவந்த பின்னரும் வளரும் ஆற்றல் கொண்டுள்ளவையாகத் திகழ்கின்றன.

அடையாளமறிவதற்கான உதவிகள்

நஞ்சுப் படர்க்கொடி செடியைக் கண்டறிவதற்கு, பெரும்பாலான நேரங்களில் கீழ்க்காணும் மூன்று இயல்புகள் போதுமானவை: (அ)மூன்று சிற்றிலைகளின் கொத்து, (ஆ)ஒன்றை அடுத்து மற்றொன்றாக உள்ள இலையமைப்பு, மற்றும் (இ)முட்கள் இன்மை. இந்த எளிமையான விவரிப்பு வேறு பல செடிகளுக்கும் பொருந்தும் எனினும், நஞ்சுப் படர்க்கொடி செடியைப் பற்றிக் கண்டறிய இயலாதவர்கள் இத்தகைய இயல்புகள் உள்ள எந்தச் செடியையும் விழிப்புடன் தவிர்த்து விட வேண்டும். இலைகள் பழுதடைதல், குளிர் காலங்களில் இலைகள் இல்லாதிருத்தல் மற்றும் சுற்றுச் சூழல் மற்றும்/அல்லது மரபு முறைகள் ஆகியவற்றால் வழக்கத்திற்கு மாறான வளர்ச்சியமைப்புகள் போன்றனவற்றால், அனுபவம் நிறைந்தவர்களுக்கும் இந்தச் செடியைக் கண்டறிவது சில சமயங்களில் கடினமாக உள்ளது.

நினைவு கூரத்தக்க பல்வேறு பாடல்கள் நஞ்சுப் படர்க்கொடியின் குணாதிசயமான தோற்றத்தை விவரிக்கின்றன:[5]

  1. "இலைகள் மூன்று, இருக்கட்டும் நன்று."
  2. "உரோமமுள்ள படர்க்கொடி, நண்பன் எனக்கது இல்லையடி."[6] நஞ்சுப் படர்க்கொடியின் கொடிகள் மிகுந்த நச்சுத்தன்மை கொண்டவை.
  3. "கந்தல் கயிறு, பேதமையற்று நீ இரு.

!" மரத்திலுள்ள நஞ்சுப் படர்க்கொடியின் கொடிகள் ஒரு வித உரோமமுள்ள "கந்தலான" தோற்றம் கொண்டுள்ளன.

மரம் ஏறுபவர்கள் கவனத்துடன் இருக்குமாறு இந்தப் பாடல் எச்சரிக்கிறது.

  1. "ஒன்று, இரண்டு, மூன்று? என்னைத் தொடாமலிருப்பது நன்று."
  2. "பழங்கள் வெள்ளை நிறத்தில், ஓடி விடு அச்சத்தில்" மற்றும் "பழங்கள் நிறம் வெண்மையில், ஆபத்து உனக்கு அண்மையில்."[7]
  3. "நீளமான நடுத் தண்டு; விலகியிரு நீ அவற்றைக் கண்டு." இது பக்கவாட்டில் உள்ள இரண்டு சிற்றிலைகளை விடவும் நீளமான தண்டுடைய மத்தியில் உள்ள சிற்றிலையை குறிக்கிறது. மேலும் இதைப் போன்று தோற்றமளிக்கும் ரஸ் அரோமாடிக்கா என்னும் வாசனையுள்ள மலர்கள் மலரும் தரும் செடியான ஃப்ராக்ரண்ட் சுமாக்|ரஸ் அரோமாடிக்கா என்னும் வாசனையுள்ள மலர்கள் மலரும் தரும் செடியான ஃப்ராக்ரண்ட் சுமாக்கிலிருந்து இதை வேறுபடுத்தி அறியவும் குறிப்பாக உதவுகிறது.
  4. "வசந்தத்தில் சிவப்புச் சிற்றிலைகள், அவை ஆபத்தின் நிலைகள்." வசந்தகாலங்களில் சில சமயங்களில் புதிய சிற்றிலைகள் கொள்ளும் சிவப்புத் தோற்றத்தை இது குறிக்கிறது. (பின்னர், வேனிற் காலங்களில், சிற்றிலைகள் பச்சையாக இருப்பது, அவற்றை மற்ற செடிகளிலிருந்து வேறுபடுத்துவதைக் கடினமாக்குகிறது; இலையுதிர் காலங்களில் அவை செந்நிற-செம்மஞ்சள் வண்ணமாக இருக்கும் என்பதை அறிக.)
  5. "கையுறை போலிருக்கும் பக்கவாட்டுச் சிற்றிலைகள்; அளிக்கும் அவை பேய்களைப் போல் நமைச்சல்கள்." இது அனைத்து நஞ்சுப் படர்க்கொடி இலைகளையும் அல்லாது, சிலவற்றின் தோற்றத்தைக் குறிக்கிறது; இதில் இரண்டு பக்க சிற்றிலைகளும் ஒரு சிறிய வெட்டுத் தடங்கொண்டுள்ளன. இதுவே "கட்டை விரல்" கொண்ட கையுறை போல இது தோற்றமளிக்குமாறு செய்கிறது. (பக்கவாட்டுச் சிற்றிலைகள் மட்டுமே நமைச்சலை ஏற்படுத்தும் என்று இந்தப் பாடலைத் தவறாகப் பொருள் கொள்ளக்கூடாது; உண்மையில் இந்தச் செடியின் அனைத்துப் பாகங்களுமே நமைச்சலை உருவாக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.)
  6. "வண்ணத்துப்பூச்சிகள் இறங்கும் இத்தடத்தில், உன் கையை நீ வைக்காதே அவ்விடத்தில்." சில வண்ணத்துப்பூச்சிகள் நஞ்சுப் படர்க்கொடி செடியின் மேல் அமர்ந்தாலும் அவை பாதிக்கப்படுவதில்லை; அதுவே அவற்றை இரையாக்கிக் கொள்ளும் சில விலங்குகளிடமிருந்து அவற்றை காப்பாற்றுகிறது. ஏனெனில் அந்த விலங்குகள் இந்தச் செடியை தவிர்த்து விடும் என்பதை இந்த வரிகள் குறிக்கின்றன.[8]

உடலின் மீதான விளைவுகள்

நஞ்சுப் படர்க்கொடிச் செடியால் உருவாக்கப்படும் எதிர்விளைவான, உருஷியால்-தூண்டு தொற்று தோல் அழற்சி என்பது ஒரு ஒவ்வாமை எதிர்விளைவு. 15%[9] லிருந்து 30%[10] மக்கள் ஒவ்வாமைக்கான பதிலிறுப்பு கொண்டிருப்பதில்லை; எனினும் பலர், மீண்டும் அல்லது அதிக அளவில் செறிவுற்ற உருஷியாலுக்கு உட்படுத்தப்பட்டால் ஒவ்வமைக்கான மிகு உணர்ச்சியைக் கொள்வர். இத்தகைய எதிர்விளைவுகள் கடும் ஒவ்வாமை என்னும் நிலைக்குக் கொண்டு செல்லலாம்.

ஒரு சாலையோரத்தில் நஞ்சுப் படர்க்கொடி

உருஷியால் என்பது தொட்டவுடன் தோலுடன் பிணைந்து கொண்டு பலத்த நமைச்சலை உருவாக்கும்; இதுவே சிவந்த நிறமுடன் வீக்கமடைந்து அல்லது நிறமற்ற தடிப்புகளாக மாறிப் பின்னர் கொப்புளங்கள் ஆகிறது. சில பாரம்பரிய மருந்துகள் இதன் மீது பயனற்றவை என்று அண்மையிலான ஆய்வுகள் உரைப்பினும், இந்தச் சிதைவுகள் காலமைன் என்னும் கழுவுநீர்மம் கொண்டு சிகிச்சையளிக்கப்படலாம்; பர்ரோவின் நீர்மம் இந்தப் புண்களை அமிழ்த்தியோ, கழுவியோ அசௌகரியத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது[11].[12][13] நமைச்சலிலிருந்து நிவாரணம் அளிப்பதற்கு சாதாரணமாக கிடைக்கும் தயாரிப்புகள்-அல்லது எளிமையான புல்லரிசிக்கூழால் கழுவுதல் மற்றும் சமையல் சோடா-ஆகியவை நஞ்சுப் படர்க்கொடிச் செடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தோல் மருத்துவர்களால் தற்பொழுது பரிந்துரைக்கப்படுகிறது.[14] தீவிரமான தருணங்களில், திறந்த கொப்புளங்களிலிருந்து தெளிவான திரவங்கள் சுரக்கும். இந்த நிலையில் புறணி இயக்க ஊக்கிகள் கொண்டு சிகிச்சை அளிப்பது தேவைப்படும்.

நஞ்சுப் படர்க்கொடியைத் தொடுவதால் உருவாகும் கொப்புளங்கள்

இவ்வாறு அரிப்பெடுக்கும் கொப்புளங்களிலிருந்து சுரக்கும் திரவங்கள் நச்சுத்தன்மையைப் பரப்புவதில்லை.[15][16][17] சில இடங்கள் அதிக அளவில் நச்சு கொண்டு மற்ற இடங்களை விட வேகமாக எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன அல்லது முதலில் நச்சுத்தன்மை பரவிய பொருளோடு இன்னமும் இணைப்பு இருப்பதால் தொற்று பரவுகிறது என்பதையே பரவும் தோல் கரப்பான்கள் உணர்த்துகின்றன.[15] கொப்புளங்கள் மற்றும் திரவம் சுரப்பது என்பதானது ரத்த நாளங்களுக்குள் இடைவெளிகள் உண்டாகி அவையே சருமத்தின் வழியாக திரவமாக ஒழுகுவதால் விளைவதாகும்; சருமத்தைக் குளிரச் செய்து விட்டால், இந்த நாளங்கள் குறுகி திரவம் சுரப்பதும் குறைந்து விடும்.[மேற்கோள் தேவை] நஞ்சுப் படர்க்கொடிச் செடியை எரித்து அதன் புகையை சுவாசித்தால், இந்தத் தடிப்பானது நுரையீரல்களின் ஓரங்களில் ஏற்படும். அதனால் மிகுந்த வலியும், சில வேளைகளில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவிற்கு சுவாசத்தில் சிரமும் நிகழக்கூடும்.[18] இந்த நஞ்சுப் படர்க்கொடிச் செடியை உட்கொண்டால், செரிமான உறுப்புகள், சுவாசப் பாதை, சிறுநீரகங்கள் அல்லது வேறு உறுப்புகளும் பாதிக்கப்படலாம்.[மேற்கோள் தேவை] நஞ்சுப் படர்க்கொடியால் விளைந்த தோல் கரப்பான், அதன் தீவிரம் மற்றும் சிகிச்சையைப் பொறுத்து, ஒன்றிலிருந்து நான்கு வாரங்கள் வரை நீடிக்கும். சில அரிதான சமயங்களில், நஞ்சுப் படர்க்கொடியின் எதிர்விளைவுகளின் காரணமாக மருத்துவமனையில் சேர்ப்பதும் அவசியமாகலாம்.[15][19]

உருஷியால் பல வருடங்களுக்கு எண்ணெய்ச் செயற்பாட்டுடன் இருக்கக்கூடும். எனவே காய்ந்து உதிர்ந்த இலைகள் மற்றும் கொடிகளைத் தொடுவதும் கூட எதிர்விளைவை ஏற்படுத்தலாம். மேலும், செடியிலிருந்து மற்ற பொருள்களுக்கு மாறிய எண்ணெய் (செல்லப்பிராணிகளின் ரோமம் போன்றவை) இந்தப் பொருள் தோலுடன் தொடர்புறும் போது தோல் கரப்பானை உருவாக்கலாம்.[20][21] இந்த எண்ணெய் பட்ட ஆடைகள், கருவிகள் மற்றும் இதர பொருட்கள் ஆகியவற்றை, இது மேலும் பரவுவதைத் தடுக்கும் வண்ணம், நன்கு கழுவ வேண்டும். நஞ்சுப் படர்க்கொடிச் செடிக்கு மிகு உணர்வு கொண்டவர்கள் இதே போன்ற ஒரு அனுபவத்தை மாங்காய்களிடத்தும் பெறக்கூடும். மாங்காய்களும் நஞ்சுப் படர்க்கொடி சார்ந்த அதே (அனகார்டிகே) குடும்பத்தையே சார்ந்தவை; மாமரத்தின் சாறு மற்றும் மாங்காய்களின் தோல் உருஷியால் போன்ற ஒரு ரசாயனக் கலவை கொண்டதாகும்.[22]

இதனுடன் தொடர்புடைய வாச மலர்கள் பூக்கும் செடியான ரஸ் அரோமாட்டிகா அல்லது ஜப்பானிய லேக்கர் மரம் ஆகியவற்றைத் தொடும்போதும், சில சமயங்களில், இதைப் போன்ற எதிர்விளைவுகள் உருவாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்த-தோற்றமுள்ள செடிகள்

  • வெர்ஜின்ஸ் போவர் (க்ளெமாடிஸ் வெர்ஜினியானா ) (ஆவிகளின் தைக்கும் ஊசிகள், ஆவிகளின் முடி, காதற் கொடி, பயணியின் சந்தோஷம், கன்னியின் இருப்பிடம், வெர்ஜினியா கன்னியின் இருப்பிடம், விலங்குகளின் துள்ளல் மற்றும் மணமுள்ள மலர்கள் கொண்ட படர்க்கொடி; சின். க்ளெமாடிடிஸ் வெர்ஜினியானா எல். வார். மிசௌரியென்ஸிஸ் (ரிட்ப்) பால்மெர் அண்ட் ஸ்டேயர்மார்க் [1]) என்றும் அறியப்படும்) ஐக்கிய நாடுகளின் பழமையான இரானங்க்யுலாகே குடும்பத்தைச் சார்ந்த படர்க்கொடியாகும். இந்தச் செடி 10-20 அடி உயரம் எழும்பக் கூடிய ஒரு படர்க்கொடியாகும். இது காடுகளின் விளிம்புகள், ஈரமான சரிவுகள், வேலி வரிசைகள், புதர்க்காடுகள் மற்றும் ஓடைகளின் கரைகள் ஆகியவற்றில் வளரும். இது ஜூலையிலிருந்து செப்டம்பர் மாதம் வரை ஒரு அங்குலம் விட்டமுள்ள வெண்மையான மணமுள்ள மலர்களைத் தருகிறது.
  • பாக்ஸ்-எல்டர் (ஏஸர் நெகுண்டோ) கன்றுகள் நஞ்சுப் படர்க்கொடியைப் போன்றே ஒத்த தோற்றமுடைய இலைகளைக் கொண்டிருக்கும், ஆனாலும் இந்தச் செடியின் ஒரு சீர் அமைப்பானது முற்றிலும் மாறுபட்டு இருக்கும். பாக்ஸ்-எல்டர் செடிகள் வழக்கமாக ஐந்து அல்லது ஏழு இலைகளைக் கொண்டிருந்தாலும், அவற்றில், அதிலும் குறிப்பாக சிறிய கன்றுகளில், மூன்று சிற்றிலைகளும் காணப்படுவதுண்டு. முக்கியக் கிளையினுடன் இலைத் தண்டுகள் சேர்ந்திருக்கும் அமைப்பைக் கவனித்து (மூன்று சிற்றிலைகளும் ஒட்டியிருக்கும் இடம்) இந்த இரண்டு செடிகளையும் வேறுபடுத்த இயலும்.

நஞ்சுப் படர்க்கொடிச் செடி ஒன்று மாற்றி ஒன்றாக இலைகளைக் கொண்டிருக்கும். இதன் பொருள் மூன்று-சிற்றிலைகள் முக்கியக் கிளையை ஒட்டி ஒன்று மாற்றி மற்றொன்றாக இருக்கும் என்பதாகும். மேபிள் (பாக்ஸ்-எல்டர் இதன் ஒரு வகையாகும்) மரம் நேர் மாறான இலைகளைக் கொண்டிருக்கும்; அடுத்த இலைத் தண்டு நேர் மாறாக இருப்பது பாக்ஸ்-எல்டர் செடியின் ஒரு இயல்பாகும்.

  • வெர்ஜினியா படர்க்கொடி (பார்தெனோசிஸ்ஸஸ் க்விங்கெஃபோலியா ) கொடிகள் நஞ்சுப் படர்க்கொடியைப் போலிருக்கக்கூடும். இளம் இலைகள் மூன்று சிற்றிலைகள் உடையதாய் இருக்கலாம் ஆனால் இலை விளிம்பில் மேலும் சில கூடுதலான இரம்பப் பற்கள் இருக்கும்; மேலும் இலையின் மேற்பரப்பு சிறிதே சுருக்கமுற்றிருக்கும். எனினும், அநேக வெர்ஜினியா படர்க்கொடிகளின் இலைகள் ஐந்து சிற்றிலைகளைக் கொண்டிருக்கும்.

வெர்ஜினியா படர்க்கொடி மற்றும் நஞ்சுப் படர்கொடி ஆகிய இரண்டுமே பொதுவாக ஒன்றாகவே வளர்வன; இவை ஒரே மரத்தில் கூட வளரலாம். நஞ்சுப் படர்க்கொடியிடம் எந்த ஒவ்வாமை-எதிர்விளைவும் இல்லாதவர்கள் கூட வெர்ஜினியா படர்க்கொடியின் சாறில் இருக்கும் ஆக்ஸலேட் படிகங்களுக்கு ஒவ்வாமை-எதிர்விளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்க.

  • மேற்கத்திய நச்சு-கருவாலி என்னும் வெஸ்டர்ன் பாய்ஸன்-ஓக் (டாக்ஸிகோடென்ட்ரான் டைவர்ஸிலோபம் ) செடியின் இலைகளும் தண்டின் இறுதியில் மும்மூன்றாக இருக்கும்; ஆனால் ஒவ்வொரு சிற்றிலையும் கருவாலி மரத்தின் இலையைப் போல வடிவம் கொண்டதாய் இருக்கும். நஞ்சுப் படர்க்கொடியை நச்சுக் கருவாலி என்று பலரும் குறிப்பிடினும், இந்த மேற்கத்திய நச்சுக் கருவாலி மேற்கு ஐக்கிய நாடுகள் மற்றும் கனடாவில் மட்டுமே வளர்கின்றது.

நஞ்சுப் படர்க்கொடி தன் சூழலின் ஈரத்தன்மை மற்றும் ஒளித்தன்மை ஆகியவற்றைப் பொறுத்து ஒன்று படர்க்கொடியைப் போல் வளரும் அல்லது புதராக கருவாலி-வகையைப் போல் வளரும் என்பதே இதன் காரணமாகும். இந்தப் படர்க்கொடி வகை குறைந்த சூரிய வெளிச்சத்துடன் கூடிய நிழலுள்ள பகுதிகளை விரும்புகிறது. இது அடிமரத்தைப் பற்றிக்கொண்டு ஏற முனைகிறது மற்றும் இது தரையிலும் மிகுந்த விரைவில் பரவக்கூடியது.

  • பாய்ஸன் சுமாக் (டாக்ஸிகோடென்ட்ரான் வெர்னிக்ஸ்) ஏழு முதல் 15 சிற்றிலைகளைக் கொண்ட ஒரு தொகுதியை கொண்டுள்ளது. பாய்ஸன் சுமாக் எப்பொழுதும் மூன்று சிற்றிலைகளை உடையதாய் இருப்பதில்லை.
  • குட்ஜூ (பியுரேரியா லோபாடா) என்பது ஒரு விஷமற்ற உண்ணக் கூடிய கொடி வகையாகும்; இது தழை போல மிக அதிகமாக படரும் அல்லது மரங்களாக உயரமாகவும் வளரும். குட்ஜூ தென் ஐக்கிய நாடுகளில் உள்ள ஒரு ஊடுருவு இனம் ஆகும். நஞ்சுப் படர்க்கொடியைப் போல, இதுவும் மூன்று சிற்றிலைகளைக் கொண்டுள்ளது; ஆயினும், இந்தச் சிற்றிலைகள் நஞ்சுப் படர்க்கொடியினுடையதை விடப் பெரியதாகவும், கீழ்ப்புறம் உரோம விளிம்புகளுடன் மென்முடிகொண்டும் உள்ளன.
  • ப்ளாக்பெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி (ருபஸ் எஸ்பிபி.) ஆகியவை நஞ்சுப் படர்க்கொடியைப் போல தோற்றமளிப்பவை; இவை, அதனுடன் தங்களது எல்லைகளையும் பகிர்ந்து கொள்கின்றன. ப்ளாக்பெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரிகள் ஆகியவற்றை ஒரு புறமும் நஞ்சுப் படர்க்கொடியை மறுபுறமும் வைத்து அவற்றின் முக்கியமான வேறுபாட்டை நோக்கினால், பிளாக்பெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரிகள் ஆகியவை தங்கள் தண்டுகளில் எப்பொழுதும் சிறுமுட்களை கொண்டிருப்பதைக் காணலாம். ஆனால் நஞ்சுப் படர்க்கொடி வழவழப்பாகவே இருக்கும். இதைத் தவிர, சில பிளாக்பெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி செடிகளின் மூன்று சிற்றிலை வடிவமைப்பு, செடி வளரும் பொழுது மாறுபடும். இதன் பின்னர் அவை பருவத்தில் வெளியிடும் இலைகள் மூன்று சிற்றிலைகளை விட அதிகமாக, ஐந்து சிற்றிலைகள் கொண்டவையாகவே இருக்கும். பிளாக்பெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரிகளின் இலைகள் விளிம்பின் ஓரங்களில் அதிக சிறிய பற்கள் கொண்டவையாய் இருக்கும்; இலைகளின் மேற்பகுதி நரம்புகள் இருக்குமிடத்தில் மிகவும் சுருக்கமுடையதாய் இருக்கும் மற்றும் இலைகளின் அடிப்பாகம் வெளிர் புதினா-பச்சையுடன் கூடிய வெண்மையாக இருக்கிறது. நஞ்சுப் படர்க்கொடி முழுவதும் பச்சையாக இருக்கும். நஞ்சுப் படர்க்கொடியின் தண்டு காவி நிறமாகவும் வடிவம் நீள் உருளையாகவும் இருக்கிறது. ஆனால் பிளாக்பெர்ரி மற்றும் ராஸ்பெர்ரியின் தண்டுகள் பச்சை நிறமாகவும், குறுக்குவாட்டில் சதுரமாகவும் மேலும் முட்கள் உடையதாகவும் இருக்கும். உண்மையில், ராஸ்பெர்ரிகள் மற்றும் பிளாக்பெர்ரிகள் ஆகியவை எப்பொழுதுமே படர்க்கொடி வகைகளாக இருப்பதில்லை; அதாவது அவை தங்கள் தண்டுகளுக்கு ஆதரவளிக்க மரத்தோடு தங்களை இணைத்துக் கொள்வதில்லை.
  • ரிவர்பாங்க் கிரேப் (விட்டிஸ் ரிபாரியா)வின் கெட்டியான பற்றுக்கொடிகள், வேர்க்கால்கள் வெளியே தெரியாமல் இருக்கின்றன; ஆனால் நஞ்சுப் படர்க்கொடியின் பற்றுக்கொடியில் மரத்தின் மேல் போகும் தண்டு உரோமங்கள் உடையதாகத் தோற்றமளிக்கும் அளவிற்கு வேர்க்கால்கள் உள்ளனவாகும். ரிவர்பாங்க் கிரேப் கொடிகள் கருஞ்சிவப்பு நிறமுடையதாய் இருக்கின்றன், இவை தமது பற்று மரத்திலிருந்து தனியாகத் தொங்கும் இயல்புடையவை, மற்றும் துணுக்குகள் போல் மரப்பட்டைகள் உடையவை; நஞ்சுப் படர்க்கொடியின் கொடிகள் காவி நிறமாகும், தனது பற்று மரத்தோடு இணைந்திருப்பவை மற்றும் அவற்றிற்கு துணுக்குகள் போல் மரப்பட்டைகள் கிடையாது.
  • ஃப்ராக்ரன்ட் சுமாக் (ரஸ் அரோமாட்டிகா) நஞ்சுப் படர்க்கொடியைப் போன்ற ஒத்த தோற்றமுள்ளது. இரண்டு இனங்களுமே மூன்று சிற்றிலைகளை உடையதாய் இருப்பினும், நஞ்சுப் படர்க்கொடியின் நடுச் சிற்றிலையானது நீண்ட தண்டில் இருக்கிறது. ஆனால் ஃப்ராக்ரன்ட் சுமாக் செடியின் நடு இலையானது அத்தனை தெளிவாகக் காணப்படும் தண்டு கொண்டு இருப்பதில்லை. ஃப்ராக்ரன்ட் சுமாக் வசந்த காலத்தில் இலைகள் உருவாகும் முன்னரே மலர்களை முகிழ்விக்கும்; ஆனால் நஞ்சுப் படர்க்கொடி இலைகள் வெளி வந்த பின்னரே மலரும். ஃப்ராக்ரண்ட் சுமாக்கின் மலர்களும் கனிகளும் தண்டின் அடிப்பகுதியில் இருக்கும்; ஆனால் நஞ்சுப் படர்க்கொடியில் இவை தண்டின் இடைப் பகுதியில் இருக்கும்.

குறிப்புகள்

  1. Bárrios, S.; Copeland, A. (2021). "Toxicodendron radicans". IUCN Red List of Threatened Species 2021: e.T124270453A192137361. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T124270453A192137361.en. https://www.iucnredlist.org/species/124270453/192137361. பார்த்த நாள்: 26 September 2023. 
  2. NatureServe (1 September 2023). "Toxicodendron radicans". NatureServe Network Biodiversity Location Data accessed through NatureServe Explorer. Arlington, Virginia: NatureServe. Retrieved 26 September 2023.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 யுஎஸ்டிஏ தீயின் விளைவுகள் தகவல் அமைப்பு: டாக்ஸிகோடென்ட்ரான் ரேடிகான்ஸ் பரணிடப்பட்டது 2010-06-23 at the வந்தவழி இயந்திரம் பிழை காட்டு: Invalid <ref> tag; name "feis" defined multiple times with different content
  4. பெட்ரைட்ஸ், ஜார்ஜ் ஏ மரங்கள் மற்றும் புதர்களுக்கான ஒரு கள வழிகாட்டி (பீட்டர்ஸன் கள வழிகாட்டிகள்), பாஸ்டன்: ஹூட்டன் மிஃப்ளின் கம்பெனி, 1986, பக்கம் 130.
  5. "Poison Ivy Treatment Guide , Getting Rid of the Plants: Identifying Poison Ivy". Archived from the original on 2011-01-10. {{cite web}}: line feed character in |title= at position 27 (help)
  6. ஹெச்டிடிபி://டபிள்யுடபிள்யுடபிள்யு.பார்க்ஸ்.சிஏ.கவ்/பேஜஸ்/735/ஃபைல்ஸ்/[தொடர்பிழந்த இணைப்பு] ட்ரான்ஸ்கிரிப்ட்டிஎம்டிலிவர்மோர்அஞ்செலிஸ்எல்அண்ட்.பிடிஎஃப் பக்கம் 3.
  7. "காம்ப் க்ரஸ்டி". Archived from the original on 2013-10-07. Retrieved 2010-04-06.
  8. மிச்செல், ராபர்ட். டி., "வண்ணத்துப்பூச்சிகளும் அந்துப்பூச்சிகளும்," நியூயார்க்: செயின்ட் மார்டின்ஸ் ப்ரெஸ், 2001, பக்கம் 133.
  9. ஹௌஸ்டஃப்வொர்க்ஸ் "நஞ்சுப் படர்க்கொடி எப்படி வேலை செய்கிறது
  10. "உலகின் தொடு-நச்சுச் செடிகள்". Archived from the original on 2010-07-02. Retrieved 2010-04-06.
  11. வில்சன், டபிள்யு. ஹெச். & லௌடர்மில்க், பி. (|2006 தாய் சேய் பராமரிப்பும் கவனிப்பும் (மூன்றாவது பதிப்பு). செயின்ட் லூயிஸ்: மாஸ்பி எல்சேவியர்.
  12. "American Topics. An Outdated Notion, That Calamine Lotion". Archived from the original on 2007-05-19. Retrieved 2007-07-19.
  13. ஆப்பெல், எல்.எம். ஓமார்ட் மற்றும் ஆர். எஃப். ஸ்டெர்னர், அவர்களின் துத்தநாக ஆக்ஸைடு: ஒரு புதிய, இளஞ்சிவப்பு, கதிர்ச்சிதர்வு நுண்ணியவடிவ படிகம். ஏஎம்ஏ ஆர்க் டெர்மடால் 73 (1956), பிபி. 316-324. பிஎம்ஐடி 13301048
  14. "American Academy of Dermatology - Poison Ivy, Oak & Sumac".
  15. 15.0 15.1 15.2 "Treating Poison Ivy Rash With Home Remedies: Jewelweed;Is Poison Ivy Rash Contagious?". Archived from the original on 2010-12-04.
  16. "Facts about Poison Ivy: Is it contagious?". Archived from the original on 2010-06-30.
  17. "Poison Ivy Treatment Guide, Outsmarting Poison Ivy: Treating Poison Ivy Exposures". Archived from the original on 7 ஜனவரி 2011. Retrieved 01 June 2008. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  18. "Facts about Poison Ivy: How do you get poison ivy?". Archived from the original on 2010-06-30.
  19. "Facts about Poison Ivy: How long does the rash last?, What can you do once the itching starts?, How do you get poison ivy?". Archived from the original on 2010-06-30.
  20. "நஞ்சுப் படர்க்கொடி, கருவாலி மற்றும் சுமாக்". Archived from the original on 2007-07-08. Retrieved 2010-04-06.
  21. "Facts about Poison Ivy: How do you get poison ivy?, Pets and Poison Ivy, How long does the oil last?". Archived from the original on 2010-06-30.
  22. மாங்காய்கள் மற்றும் நஞ்சுப் படர்க்கொடி (புதிய இங்கிலாந்து மருத்துவப் பத்திரிகையில் வலைக் கட்டுரை)

புற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rhus radicans
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya