வாணிஸ்ரீ
வாணிஸ்ரீ, (இயற்பெயர் இரத்ன குமாரி, பிறப்பு: ஆகத்து 3, 1948) ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும், சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.[2] 40 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையில், மூன்று முறை தென்னிந்திய பிலிம்பேர் விருது, உட்பட நந்தி விருது, தமிழ்நாடு அரசு திரைப்பட விருது[2] ஆகியவற்றைப் பெற்றுள்ளார். தொழில்வாணி 1962 ஆம் ஆண்டு பீஷ்மா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். கே. பாலச்சந்தர் எழுதிய சுக துக்கலு, மரபுராணி கதா (1967) ஆகிய திரைப்படங்களில் துணை வேடத்தில் நடித்து இவர் கவனம் பெற்றார். வாணிஸ்ரீ கிருஷ்ணவேணி, பிரேம் நகர், தசரா புல்லோடு, ஆராதனா, ஜீவிதா சக்ரம், ரங்குல ரத்னம், ஸ்ரீ கிருஷ்ண துலாபாரம், பக்த கண்ணப்பா, பொப்பிலி ராஜா போன்ற பெருவெற்றிப் படங்களில் நடித்துளார்.[3] இவர், இத்தரு அம்மாயிலு (1972), கங்கா மங்கா, சீவனா சோதி(1975), மற்றும் சில்பி கிருட்டிணடு (1978) போன்ற தெலுங்கு படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இவர் சிவாஜி கணேசனுடன் உயர்ந்த மனிதன் (1968), நிறைகுடம் (1969), குலமா குணமா (1971), வசந்த மாளிகை (1972), சிவகாமியின் செல்வன் (1974), வாணி ராணி (1974), ரோஜாவின் ராஜா (1976), இளைய தலைமுறை (1977), புண்ணிய பூமி (1978), வாழ்க்கை அலைகள் (1978) மற்றும் நல்லதொரு குடும்பம் (1979) என மொத்தம் 11 படங்களில் நடித்துள்ளார்.[4][3] மேலும் எம். ஜி. ஆருடன் கண்ணன் என் காதலன் (1968), தலைவன் (1970) மற்றும் ஊருக்கு உழைப்பவன் (1976) ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ளார் தனிப்பட்ட வாழ்கைவாணிஸ்ரீ 1978 இல் டாக்டர் கருணாகரனை மணந்து திரையுலகிலிருந்து விலகினார். இந்த இணையருக்கு ஒரு மகனும், ஒரு மகளு உள்ளனர். பின்பு 1980 களின் பிற்பகுதியில் அம்மா வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.[3] 2020 மே 23 அன்று மாரடைப்பு காரணமாக இவரது 36 வயது மகன் அபிநயா வெங்கடேச கார்த்திக்கை இறந்தார்.[5] விருதுகள்
நடித்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia