நீரும் நெருப்பும்
நீரும் நெருப்பும் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இதன் கதைக்களம் 1844 ஆம் ஆண்டு அலெக்ஸாண்ட்ர் டுமாஸ் எழுதிய தி கோர்சிகன் பிரதர்ஸ் என்ற பிரெஞ்சு புதினத்தை அடிப்படையாகக் கொண்டது.[1] இப்படம் இந்தியில் கோர அவுர் காலா என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[2] கதைதந்தையைக் கொன்ற மார்த்தாண்டனை பழிவாங்கும் இரட்டை இளவரசர்களான மணிவண்ணன், கரிகாலன் ஆகியோர் பற்றிய கதை இது. இரட்டையர்கள் பிரிக்கப்பட்டு வளர்க்கபடுகின்றனர். ஆனால் மணிவண்ணனுக்கு ஏற்படும் அதே உணர்வால் கரிகாலனும் ஆட்படுகிறார். இரட்டையர்களில் ஒருவர் அருணகிரியாலும், மற்றொருவர் மருதுவால் வளர்க்கப்படுகின்றனர். ஒருவர் படித்தவர், மற்றவர் திறமையான போர்வீரர். மார்த்தாண்டனை இருவரும் சேர்ந்து திட்டமிட்டு வீழ்த்துகின்றனர். நடிகர்கள்
இசை
தயாரிப்புஜெமினி ஸ்டூடியோவில் உருவான இந்தப் படத்தின் வாள் சண்டை அப்போது பேசப்பட்டது. சண்டைக் காட்சிகளில் ம.கோ.இராவுக்கு டூப்பாக கே. பி. இராமகிருஷ்ணன் நடித்தார்.[4] வரவேற்புஇப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த பெரும் வெற்றியை ஈட்டவில்லை. ம.கோ.இரா இரட்டையர்களாக நடித்த ஒரு கதாபாத்திரமான கரிகாலன் இறப்பதை இரசிகர்கள் அப்போது ஏற்கவில்லை என்று பேச்சு எழுந்தது.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia