பூம்புகார் (திரைப்படம்)
பூம்புகார் 1964 இல் சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, மு. கருணாநிதி திரைக்கதை, உரையாடல் எழுதி ப. நீலகண்டன் இயக்கிய ஒரு தமிழ் காவிய படம். 1942 ஆம் ஆண்டு வெளியான கண்ணகி படத்திற்குப் பின் வந்த சிலப்பதிகாரம் காவிய அடிப்படையில் உருவாக்கப்பட்ட இரண்டாவது படம் இது. இத்திரைப்படத்தில் கண்ணகியாக விஜயகுமாரி, கோவலனாக எஸ். எஸ். இராஜேந்திரன், மாதவியாக ராஜஸ்ரீ, கவுந்தி அடிகளாக கே. பி. சுந்தராம்பாள் ஆகியோர் நடித்திருந்தனர். நடிகர்கள்
பாடல்கள்பூம்புகார் திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம். பாடல்களை உடுமலை நாராயண கவி, மாயவநாதன், ஆலங்குடி சோமு, மு. கருணாநிதி, இராதாமாணிக்கம் ஆகியோர் இயற்றினர்.[4]
துணுக்கு தகவல்அன்று கொல்லும் அரசின் ஆணை.. என்ற பாடலில் "நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது" எனக் கவிஞர் மாயவநாதன் எழுதியிருந்தார். கே. பி. சுந்தராம்பாள் அந்த வரியைப் பாட மறுத்துவிட்டார். மாயவநாதனோ ஊருக்குப் போய்விட்டார். எனவே கருணாநிதியே அந்த வரியை "நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது" என மாற்றி எழுதிக் கொடுத்தார்.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia