ராமன் தேடிய சீதை (1972 திரைப்படம்)

ராமன் தேடிய சீதை
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புஎன். கனக சபாய்
ஜெயந்த் பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
நீளம்4553 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராமன் தேடிய சீதை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

நடிகர் கதாப்பாத்திரம்
எம். ஜி. இராமச்சந்திரன் ராமன்
ஜெயலலிதா சீதா, ரம்பா மற்றும் ராணி
எம். என். நம்பியார் பாபு பைரவன்
அசோகன் கோதன்ராஜ்
வி. கே. ராமசாமி சிவ சங்கர், ராமனின் மாமா
நாகேஷ் கிருஷ்ணன், ராமனின் நண்பன்
வி. எஸ். ராகவன் கார்மேகம், சீதாவின் அப்பா
ஓ. ஏ. கே. தேவர் சிங்கமுத்து, ஓய்வுபெற்ற இராணுவ வீரர்
மனோரமா சாமந்தி
ஜி. சகுந்தலா அத்தை
ராகினி யே அண்ணா பாடலில் சிறப்புத் தோற்றம்

பாடல்கள்

எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்(கள்) நீளம் (நி: நொ)
1 என் உள்ளம் உந்தன் கண்ணதாசன் டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி 4:29
2 மச்சானா மாமாவா வாலி எல். ஆர். ஈஸ்வரி 4:28
3 நல்லது கண்ணே கண்ணதாசன் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 4:34
4 படார் படார் வாலி டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி 4:43
5 திருவளர் செல்வியே கண்ணதாசன் டி. எம். சௌந்தரராஜன், பி. வசந்தா 4:09
6 யே அண்ணா வாலி சாய்பாபா, ராஜலட்சுமி 4:42

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "ஆரம்பத்திலேயே, ஒரு சில நிமிட சந்திப்பின்போதே சீதையைத் தன் லட்சியப் பெண்ணாகத் தேர்ந்தெடுத்துவிட்ட பின் கதையில் சுவாரசியம் ஏற்படுமா? அதேபோல் சீதை இறந்துவிட்டாள் என்று கேள்விப்பட்டதும் கதாநாயகன் வேறு பெண்ணைத் தேடிப் புறப்படுவதும் உயர்வாக இல்லை. இந்தக் குறைகளெல்லாம் ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தால் தான் தோன்றும். ஆனால், படம் பார்க்கும்போது அப்படியெல்லாம் நம்மைச் சிந்திக்கவிடாமல் கலகலவென்று பொழுதுபோக்குச் சம்பவங்களால் நம் கவனத்தைத் திருப்பிவிடுகிறார்கள்!" என்று எழுதினர்.[1]

மேற்கோள்கள்

  1. "சினிமா விமர்சனம் : ராமன் தேடிய சீதை". விகடன். 2008-10-01. Retrieved 2025-06-09.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya