நையோபியம்(V) ஆக்சிநைட்ரேட்டு
Niobium(V) oxynitrate
பெயர்கள்
|
வேறு பெயர்கள்
- நையோபைல் நைட்ரேட்டு
- நையோபியம் ஆக்சிநைட்ரேட்டு
|
இனங்காட்டிகள்
|
|
100456-47-1 N
|
EC number
|
623-412-8
|
InChI=1S/3NO3.Nb.O/c3*2-1(3)4;;/q3*-1;+3; Key: XWRVJMHGWNZEAR-UHFFFAOYSA-N
|
யேமல் -3D படிமங்கள்
|
Image
|
[Nb](O[N+]([O-])=O)(O[N+]([O-])=O)(O[N+]([O-])=O)=O
|
பண்புகள்
|
|
NbO(NO3)3
|
வாய்ப்பாட்டு எடை
|
294.92 கி/மோல்
|
தோற்றம்
|
வெண்மையான திண்மம்
|
உருகுநிலை
|
120 °C (248 °F; 393 K)[1] (சிதைவடையும்)
|
|
வினைபுரியும்[1]
|
கரைதிறன்
|
டை எத்தில் ஈதர், மெத்தில் சயனைடு, மற்றும் பென்சீன் ஆகியவற்றில் சிறிதளவு கரையும்.[1]
|
கட்டமைப்பு
|
படிக அமைப்பு
|
நாற்கோணம்[1]
|
தீங்குகள்
|
GHS pictograms
|

|
GHS signal word
|
அபாயம்
|
|
H272, H315, H319, H335
|
தொடர்புடைய சேர்மங்கள்
|
ஏனைய எதிர் மின்னயனிகள்
|
நையோபியம் ஆக்சிகுளோரைடு
|
ஏனைய நேர் மின்அயனிகள்
|
வனேடைல் நைட்ரேட்டு
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
|
|
|
நையோபியம்(V) ஆக்சிநைட்ரேட்டு (Niobium(V) oxynitrate) NbO(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் நாற்கோணகப் படிகங்களாக திண்மநிலை இது காணப்படுகிறது. தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிந்து நையோபியம் ஐந்தாக்சைடை கொடுக்கிறது.
- NbO(NO3)3 + H2O → Nb2O5 + HNO3
தயாரிப்பு
நையோபியம் பெண்டாகுளோரைடுடன் டைநைட்ரசன் பெண்டாக்சைடு சேர்மத்தைச் சேர்த்து 30 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் நையோபியம்(V) ஆக்சிநைட்ரேட்டு உருவாகிறது.:[1]
- NbCl5 + 4N2O5 → NbO(NO3)3 + 5NO2Cl
நைட்ரைல் குளோரைடு இவ்வினையில் உடன் விளைபொருளாகக் கிடைக்கிறது. அசிட்டோநைட்ரைல் முன்னிலையில் டைநைட்ரசன் டெட்ராக்சைடுடன் நையோபியம் பெண்டாகுளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அசிட்டோநைட்ரைல் நையோபியம் டையாக்சைடு டைநைட்ரேட்டு அணைவுச் சேர்மம் உருவாகிறது. இச்சேர்மம் தண்ணீருடன் வினைபுரிந்து நையோபியம் பென்டாக்சைடை உருவாக்கி 65 ° செல்சியசு வெப்பநிலையில் சிதைகிறது. [2]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 B. O. Field; C. J. Hardy (1963). "Trinitratoniobium(V) Oxide, NbO(NO3)3" (in English). Proceedings of the Chemical Society: 11. doi:10.1039/PS9630000001.
- ↑ K. W. Bagnall; D. Brown; P. J. Jones (1964). "Niobium(V) and tantalum(V) nitrates" (in English). Journal of the Chemical Society (451): 2396-2400. doi:10.1039/JR9640002396.