பொட்டாசியம் நையோபேட்டு
பொட்டாசியம் நையோபேட்டு (Potassium niobate) என்பது KNbO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரோவ்சிகைட்டு அயமின் படிகமான இது நேரியல்சாரா ஒளியியல் குணகப் பண்புகளைப் பெற்றுள்ளது.[1] பொட்டாசியம் நையோபேட்டால் ஆன நானோ கம்பிகள் இசைவிப்பு ஒரியல்பு ஒளியை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. எலிகளுக்கு வாய்வழி கொடுக்கும் போது இதன் உயிர் போக்கும் LD50 அளவு 3000 மி.கி/கி.கி ஆகும். பயன்கள்பொருள் அறிவியல் ஆய்வுகளில் [2] பொட்டாசியம் நையோபேட்டு சீரொளி அல்லது லேசர்,[3] துளிமம் தொலைப்பெயர்ச்சி,[4] போன்ற பல்வேறு பிரிவுகளிலும் பயன்படுகிறது. மேலும் துகள்ம இணைபொருட்களின் ஒளியியல் பண்புகளை ஆய்வு செய்யவும் பொட்டாசியம் நையோபேட்டு பயன்படுகிறது[5] மின்னணு நினைவு தேக்கக பயன்பாட்டுடன்[2] கூடுதலாக ஒத்ததிர் இரட்டிப்பு தொழில்நுட்பத்திலும் பொட்டாசியம் நையோபேட்டு பயன்படுத்தப்படுகிறது. இத்தொழில்நுட்பம் {[ஐ.பி.எம். அல்மாடென் ஆய்வு மையம்|ஐ.பி.எம். அல்மாடென் ஆய்வு மையத்தால்]] [3]உருவாக்கப்பட்டதாகும். இதன்மூலம் சிறிய அகச்சிவப்பு லேசர்களை நீலநிற ஒளியாக வெளியிட முடியும். பொட்டாசியம் நையோபேட்டைச் சார்ந்துள்ள, நீலநிற லேசர்களை உற்பத்தி செய்வதற்கான இத்திட்டம் இக்கட்டான தொழில்நுட்ப திட்டமாகக் கருதப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia