நையோபியம் மோனாக்சைடு (Niobium monoxide) என்பது NbO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல்சேர்மமாகும். நையோபியம் ஓராக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைக்கலாம். சாம்பல் நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் உலோகம் சார்ந்த கடத்தும் தண்மையைக் கொண்டுள்ளது[1].
கட்டமைப்பு
பாறை உப்பில் இருப்பதைப் போல வழக்கத்திற்கு மாறான கனசதுர கட்டமைப்பை நையோபியம் மோனாக்சைடு ஏற்கிறது. ஆனால், இங்கு நையோபியம் மற்றும் ஆக்சிசன் அணுக்கள் இரண்டும் நான்கு ஒருங்கிணைவு சதுரத்தளத்தில் உள்ளன [1]. மேலும், நையோபியம் மையங்கள் எண்முக வடிவில் அடுக்கப்பட்டுள்ளன, கீழ்நிலை நையோபியம் ஆலைடுகளில் காணப்படும் எண்முக நையோபியம் தொகுதிகள் போன்ற கட்டமைப்பு ஒற்றுமையையும் இது கொண்டுள்ளது [1]. நையோபியம் மோனாக்சைடில் Nb-Nb பிணைப்பின் பிணைப்பு நீளம் 298 பைக்கோ மீட்டர்களாகும். உலோக மையங்களுக்கு இடையில் வலிமையாகவும் கிட்டத்தட்ட சகப்பிணைப்பும் உள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது [2].
1.38 கெல்வின் வெப்பநிலையில் இச்சேர்மம் ஒரு மீக்கடத்தியாகச் செயல்படுகிறது. NbO மணிகளை சூழ்ந்து Nb2O5 அடுக்கு உருவாகியுள்ள மின்தேக்கிகளில் மின்காப்புப் பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது [3][4][5].
தயாரிப்பு
நையோபியம் பென்டாக்சைடை ஐதரசன் வாயுவுடன் வினைபுரியச் செய்து நையோபியம் மோனாக்சைடு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக ஒத்தவிகிதசமயிணைப்பு முறை வினையில் இது தயாரிக்கப்படுகிறது [1] More typically, it is prepared by comproportionation:[6]
Nb2O5 + 3 Nb → 5 NbO.
மேற்கோள்கள்
↑ 1.01.11.21.3Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. ISBN0080379419.
↑Electronic band structure and bonding in Nb3O3, Physical Review B (Condensed Matter), 48, 23, 1993, 16986-16991 எஆசு:10.1103/PhysRevB.48.16986
↑C. Nico et al. Sintered NbO powders for electronic device applications The Journal of Physical Chemistry C 2011, Volume 115(11), Pages: 4879–4886 எஆசு:10.1021/jp110672u
↑C. Nico et al. NbO/Nb2O5 core–shells by thermal oxidation Journal of the European Ceramic Society 2013, Volume 33(15-16), Pages: 3077–3083 எஆசு:10.1016/j.jeurceramsoc.2013.06.020
↑Kazumi Naito, Isao Kabe,(Showa Denko K.K.) Production method of solid electrolytic capacitor US patent 6882522(2005)