நையோபியம் ஆக்சிகுளோரைடுநையோபியம் ஆக்சிகுளோரைடு (Niobium oxychloride) என்பது NbOCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறப் படிகமாக எதிர்காந்தப் பண்புடன் ஒரு திண்மமாக இது காணப்படுகிறது. நையோபியம் வேதியியலில் ஒரு பொதுவான வினையாக்கியாகப் பயன்படும் நையோபியம் பெண்டாகுளோரைடின் மாதிரிகளில் நையோபியம் ஆக்சிகுளோரைடு ஒரு மாசாகக் காணப்படுகிறது. கட்டமைப்புதிண்மநிலையில் நையோபியத்தின் ஒருங்கிணைப்பு கோளம் உருக்குலைந்த எண்முக வடிவமாகும். Nb-O பிணைப்புகள் மற்றும் Nb-Cl பிணைப்புகள் சமமற்றவையாக உள்ளன. இந்த கட்டமைப்பை O-Nb-O பாலங்களால் இணைக்கப்பட்ட சமதள Nb2Cl6 உள்ளகம் என விவரிக்கலாம். இந்த வழியில், இச்சேர்மம் இரட்டை இழை சங்கிலியைக் கொண்ட பலபடி என சிறப்பாக விவரிக்கப்படுகிறது.[1][2] 320 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் உள்ள வாயு நிலை கட்டத்தில் இராமன் நிறமாலை நையோபியம்-ஆக்சிசன் இரட்டைப் பிணைப்பைக் கொண்ட பட்டைக்கூம்பு ஒருமத்துடன் ஒத்துப்போகிறது.[3] ![]() தயாரிப்புநையோபியம் பெண்டாகுளோரைடுடன் ஆக்சிசனைச் சேர்த்து சூடுபடுத்தி வினைபுரியச் செய்தால் நையோபியம் ஆக்சிகுளோரைடு உருவாகும்:[4]
இந்த வினை சுமார் 200 ° செல்சியசு வெப்பநிலையில் நடத்தப்படுகிறது. கார்பன் டெட்ராகுளோரைடு மற்றும் தயோனைல் குளோரைடு போன்ற பல்வேறு குளோரினேற்ற முகவர்களுடன் நையோபியம் பெண்டாக்சைடு வினைபுரிந்தாலும் நையோபியம் ஆக்சிகுளோரைடு ஒரு முக்கிய பக்க-விளைபொருளாக உருவாகிறது.[4][5]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia