நையோபியம் ஈராக்சைடு( Niobium dioxide) என்பது NbO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீலக்கருப்பில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மத்தில் NbO1.94-NbO2.09[1] என்ற அளவுகளில் விகிதவியல் அல்லாத ஓர் இயைபுச் சேர்க்கையில் தனிமங்கள் இணைந்துள்ளன. Nb2O5 உடன் ஐதரசன் வாயுவைச் சேர்த்து 800 முதல் 1350 °செ[1]வெப்பநிலையில் வினைபுரிந்து நையோபியம் ஈராக்சைடு உருவாகிறது. Nb2O5 உடன் நையோபியம் தூளைச் சேர்த்து 1100°செ வெப்பநிலையில் வினைபுரியச் செய்து தயாரிப்பது ஒரு மாற்று வழிமுறையாகும்.[2]
அறை வெப்பநிலை மற்றும் உயர் வெப்பநிலைகளில் , நையோபியம் ஈராக்சைடானது குறுகிய Nb-Nb இடைவெளியுள்ள Nb-Nb பிணைப்புகளாலான நாற்கோண, உரூத்தைல் அமைப்புடன் காணப்படுகிறது[3]. குறுகிய Nb-Nb இடைவெளியுள்ள Nb-Nb பிணைப்புகளாலான உரூத்தைல் அமைப்பில் ஒன்றும் சிர்க்கோனியம் ஆக்சைடுகனிமம்பேடெலியைட்டு தொடர்பான அமைப்பில் ஒன்றுமாக உயர் அழுத்த நிலைகளில் இரண்டு வேறுபட்ட அமைப்புகள் அறியப்படுகின்றன.[4]
↑Bolzan, A; Fong, Celesta; Kennedy, Brendan J.; Howard, Christopher J. (1994). "A Powder Neutron Diffraction Study of Semiconducting and Metallic Niobium Dioxide". Journal of Solid State Chemistry113: 9. doi:10.1006/jssc.1994.1334. Bibcode: 1994JSSCh.113....9B.
↑Patent EP1524252, Sintered bodies based on niobium suboxide, Schnitter C, Wötting G
↑Method for producing tantallum/niobium metal powders by the reduction of their oxides by gaseous magnesium, US patent 6171363 (2001), Shekhter L.N., Tripp T.B., Lanin L.L. (H. C. Starck, Inc.)