பச்சை மயில்
பச்சை மையில் (ஆங்கிலப் பெயர்: green peafowl, அறிவியல் பெயர்: Pavo muticus) அல்லது இந்தோனேசிய மயில் (Indonesian peafowl) என்பது தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தோசீனாவின் வெப்ப மண்டல காடுகளை பூர்வீகமாக கொண்ட ஒரு மயில் இனம் ஆகும். இது மியான்மாரின் தேசியப் பறவையாக உள்ளது. தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவலாக முன்னர் காணப்பட்ட இது தற்போது கம்போடியா (முதன்மையாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்) மற்றும் அதை ஒட்டியுள்ள வியட்நாமின் பகுதிகளில் மட்டுமே ஒரு சிறிய தனித்துவிடப்பட்ட எண்ணிக்கையில் காணப்படுகிறது. காடுகள் அழிப்பு, விவசாயம் மற்றும் தகுந்த வாழ்விடத்தை இழத்தல் ஆகியவை இவற்றின் எண்ணிக்கையை கடுமையாக குறைத்துள்ளது. இவற்றின் இயற்கையான அழகு காரணமாக இவை சில நேரங்களில் வளர்ப்புப் பிராணி வணிகம், இறகுகளை சேகரிப்பவர்கள் மற்றும் இவற்றின் இறைச்சிக்காகவும் கூட வேட்டைக்காரர்களால் இலக்காக்கப்படுகின்றன.[2] ![]() மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia