பதினாறாவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
ஆந்திரப் பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்றமானது (16th Andhra Pradesh Assembly) 2024 இல் நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 2024 மே 13 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒரே கட்டமாக நடைபெற்றது. 2024 சூன் 4 ஆம் தேதி காலை அதிகாரப்பூர்வமான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் 175 தொகுதிகள் உள்ளன, அவற்றில் 29 தொகுதிகள் பட்டியல் சாதியினருக்கும், 7 தொகுதிகள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.[1] தேர்தல் முடிவுகள்2024 சூன் 4 ஆம் தேதி காலை அதிகாரப்பூர்வமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.[2] ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது, மேலும் ஜனசேனா கட்சி 21 இடங்களையும், தற்போதைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 11 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி 8 இடங்களையும் பெற்றது.[3] உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia