பயனர் பேச்சு:மாயவரத்தான்வாருங்கள்!வாருங்கள், மாயவரத்தான், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள். தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்! நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும். பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:15, 27 பெப்ரவரி 2013 (UTC) பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி வணக்கம், மாயவரத்தான்! தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:41, 18 மார்ச் 2013 (UTC) பதக்கம்
வாழ்த்துகள்நண்பருக்கு, விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்பு மகிழ்ச்சியடையச் செய்கிறது. தொடர்ந்து தங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.என் இனிய நல்வாழ்த்துகள். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:06, 19 மார்ச் 2013 (UTC) நன்றி. எல்லாம் உங்களுடைய ஊக்கம் தான் காரணம்! :) --பயனர்:மாயவரத்தான்
மாயவரத்தான் என்ற பெயரில் ஒருவர், எழுத்தாளரோ, கவிஞரோ, குறிப்பிடத்தக்க கட்டுரைகளை, கவிதைகளை, நூல்களை எழுதியிருந்தாலோ, விருதுகள் வாங்கியிருந்தாலோ, மாவட்ட அளவில் புகழ் பெற்றிருந்தாலோ அவரைப் பற்றிய கட்டுரையை எழுதலாம். அவர் தொடர்பான தகவல்களுக்கு செய்தித்தாள், இணையதளங்களில் இருந்து ஆதாரம் சேர்க்கலாம். ஒருவேளை இது நீங்களாக இருந்தால், இக்கட்டுரையை உங்களைத் தவிர்த்த வேறு யாராவது தான் எழுத முடியும். சில தமிழ் எழுத்தாளர்கள் மாவட்ட அளவில் புகழ்பெற்றிருப்பார்கள். அவர்களைப் பற்றி இனையத்தில் கிடைக்காது. எனவே சிலர் அவர்களைப் பற்றி எழுதியிருப்பர். குறிப்பிடத் தக்க அளவில் பிரபலம் அடையாதவர் என்று ஒருவரை நினைத்தால் அவரைப் பற்றிய கட்டுரையை நீக்குமாறு கேட்கலாம். இங்கே பல பிழைகள் இருக்கலாம். கோபப்படாமல் திருத்துங்கள், பதில் அளியுங்கள். (நீங்கள் புதியவர் என்பதால் உங்களுக்கு தெரிந்திருக்காது என்று நினைத்து மணியன் ஐயா தன் கருத்தை கூறியிருந்தார். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.) :) மேற்கொண்டு உதவி தேவை என்றால் கேளுங்கள். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:19, 21 மார்ச் 2013 (UTC)
வேண்டுகோள்வணக்கம். நீங்கள் விஸ்வரூபம் பேச்சுப்பக்கத்தில் கூறியிருப்பதை வைத்து நீங்கள் தரக்கண்கானிப்பில் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. மேர்கோள் சேர்ப்பதையும், பகுப்புகலை இணைப்பதையும் முறையே விக்கிப்பீடியா:புரூவ் இட், விக்கிப்பீடியா:விரைவுப் பகுப்பி போன்ற கருவிகள் எளிதாக்கும். முயன்று பாருங்கள். மேலும் உங்களது துறை என்ன என்பதை பற்றியாவது பயனர் பக்கத்தில் கொடுக்கலாமே? ஏதாவது உங்கள் துறைசார் ஐயங்கலை உங்களிடம் கேட்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:03, 23 மார்ச் 2013 (UTC)
விகடன் தயாரிப்பு!விகடன் தயாரிப்பு என்றால் என்ன? நீங்கள் விகடன் குழுமங்களில் பத்திரிக்கையாளராக உள்ளீர்களா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:03, 24 மார்ச் 2013 (UTC) உங்கள் பயனர் பக்கத்தை பார்த்து புரிந்து கொண்டேன் நன்றி--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:05, 24 மார்ச் 2013 (UTC)
தாய்லாந்தில் சில உதவிகள்![]() உங்கள் பயனர் பக்கம் பார்த்ததில் நீங்கள் தாய்லாந்துக்கு அதிகம் போய் வருவதாக தெரிகிறது. சந்திரபானு மற்றும் சாவகன் மைந்தன் கட்டுரைகளை பார்க்கவும். மேலும் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு ஒன்றை பற்றி அப்பாத்துரையார் தன்னுடைய நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அது, "சாய நாடு, ஜவா நாடு என்ற நாட்டுப் பெயர்கள், அமைந்த சாவக நாட்டுக் கல்வெட்டுக்கள் பல உண்டு. ஜய நகரம், சுந்தர பாண்டியன் என்ற பெயர்களை உட்கொண்ட கல்வெட்டும் ஒன்று உளது. ‘ஜய நகர சுந்தர பாண்டிய தேவாதீசுவர நாம ராஜாபிஷேக’ என்பது அதன் வாசகம் ஆகும். ‘பாண்டிய’ என்ற பெயருக்கேற்ப இந்தக் கல்வெட்டில் மீன் இலச்சினையும் காணப்படுகிறது. " மேலுள்ள கல்வெட்டு சாவகம் அல்லது தாய்லாந்தில் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் இக்கல்வெட்டு குறிக்கும் வாசகம் சாவகன் மைந்தன் படையை சுந்தரபாண்டியன் வெற்றி கொண்டதையே குறிப்பதாகலாம். இக்கல்வெட்டு மட்டும் மீண்டும் கண்டறிய படுமெனில் தாய்லாந்து முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கீழிருந்ததாக நிறுவப்படும். சந்திரபானுவின் புத்த ஸ்தூபியில் ஏதாவது கிட்ட வாய்ப்புண்டு (படம்). இது பற்றிய செய்தியை தாய்லாந்தில் உள்ள தமிழ் வரலாற்றாய்வளர்களின்/ஆர்வலர்களின் காதில் போட்டு வையுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:37, 24 மார்ச் 2013 (UTC)
வணக்கம். மாயவரத்தாரே. நான் ஏற்கனவே கூரிய கல்வெட்டுச் செய்தி சுந்தர பாண்டியன் என பெயர் பெற்ற சாவக மன்னனான செயநேகரன் என்பவனுடையது. அதனால் இக்கல்வெட்டு தாய்லாந்தில் இல்லை. அங்கே தேட வேண்டாம். சாவகத் தமிழ் கல்வெட்டுகள் எல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுளதால் எப்படியும் நூல்களில் இருந்து கண்டறிந்துவிடுவேன். மேலதிக தகவல்களுக்கு அப்பாத்துரையார் கொடுத்த தவறான தகவல் பக்கத்துக்கு வரவும். ஆனால் இதில் நான் கற்றுக்கொண்டது என்னவெனில் வெவ்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் வரலாறு தொல்லியல் படிக்கும் தமிழ் மாணவர்களை முகநூல் மூலம் ஒன்றிணைக்க வேண்டும். இத்தகவலை தேடவே எனக்கு மூன்று மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இதுவே அந்நாட்டின் தமிழ் மாணவர்களிடம் கேட்டிருந்தால் தகவல் எளிதாக வந்திருக்கும். நீங்கள் உங்களுக்குத் தெரிந்த தாய்லாந்து தொல்லியல் தமிழ் ஆர்வலர்களை முகநூலில் என்னை தொடர்பு கொள்ளச் சொன்னால் நலம். நேரம் கிடைக்கும் போது முயற்சிக்கவும்.[1]. அப்படியே உங்கள் முகநூல் முகவரியையும் த்ந்தால் நன்று. நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:28, 29 சூன் 2013 (UTC) கையொப்பம்{கட்டுரை/பயனர்) பேச்சுப் பக்கங்களில் உரையாடும் போது கையொப்பம் இட மறக்காதீர்கள். கருத்தின் முடிவில், கையொப்பம் இட ~~~~ என்று இட்டால் போதும். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:14, 26 மார்ச் 2013 (UTC) மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்வணக்கம், மாயவரத்தான்! ![]() நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :) குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:45, 2 ஏப்ரல் 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திப்புதமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் முடிவடைவதையொட்டி சென்னையில் தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திப்பு நிகழ்வு சென்னையில் இரு நாட்கள் நடைபெற உள்ளன. தாங்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இந்நிகழ்வில் கலந்து கொள்வது குறித்த விருப்பத்தை இங்கு பதிவு செய்திட வேண்டுகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:57, 5 சூலை 2013 (UTC) எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் கோவையில் இருந்து கிளம்புவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதால் மாநாட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் சொல்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:11, 17 சூலை 2013 (UTC) சட்டை (டிசர்ட்) தயாரிப்புக்கு உதவிவணக்கம் நண்பரே, தாங்கள் [விக்கிப்பீடியா பத்தாண்டுகள்] பக்கத்தில் சட்டை தயாரிப்பு பணியில் தங்களுக்கு உள்ள அனுபவம் மற்றும், சட்டைகள் தைத்துக் கொடுப்பதில் முன்வந்து விருப்பத்தையும் தெரிவித்துள்ளீர்கள். அதற்கு தங்களுக்கு மிகவும் நன்றி. தற்போது சட்டைகள் தயாரிப்பு பணியினை துவங்க உள்ளோம். முதற்கட்டமாக சட்டை வடிவமைப்பு பணிகளை நண்பர்கள் தாரிக் மற்றும் ஆன்டன் கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள். இம்மாதம் 5 ம் தேதிக்குப் பிறகு சட்டைகளை அச்சடிக்கும் பணிக்கு சில நிறுவனங்களை அனுகலாம் என்று இருக்கிறோம். அவற்றுக்கு தங்களுடைய உதவியும் தேவைப்படுகிறது. சட்டையினைப் பற்றி குறிப்புகள்- 1) வெள்ளை நிறத்தில் காலர் வைத்த சட்டை. (பாக்கெட்டுடன் இருந்தால் சிறப்பு). துணியின் தன்மை பருத்தியாக இருந்தால் நல்லது. 2) அளவுகள் 100க்கு எனும் பொழுது small 5%, medium 20%, large 40% extra large 30%, XXL 5% என்ற அளவுகளில் தேவை. எண்ணிக்கை தற்போது 50 என்ற அளவில் வைத்து விக்கிமீடியா அறக்கட்டளைக்கு அனுப்பியுள்ளமையால் small 3 , medium 10, large 20, extra large 15, XXL 2 என்ற அளவில் தேவைப்படும். இச்செய்தி தங்களுடைய பார்வைக்கு வரும் பொழுது என்னுடைய பேச்சுப் பக்கத்திலோ அல்லது 9566157066 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடர்புகொள்ளுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:16, 2 செப்டம்பர் 2013 (UTC)
பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்புவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:12, 18 செப்டம்பர் 2013 (UTC)
விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு![]() வணக்கம் மாயவரத்தான்! 2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersGreetings, The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page. You can also verify your eligibility using the AccountEligiblity tool. MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC) Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters. |
Portal di Ensiklopedia Dunia