பாரீசுவ ஜீனாலயம்

ஒசூர் வெங்கடரமண சாமி குன்றின் படிக்கட்டை ஒட்டியுள்ள சைன தீர்தரங்கர் சிற்பம்
ஒசூர் வெங்கடரமண சாமி குன்றில் உள்ள வெங்கட ரமண சாமி கோயில் வளாகத்தில் உள்ள சைன தீர்தரங்கர் சாந்திநாதர் சிற்பம்

பாரீசுவ ஜீனாலயம் என்பது தமிழ்நாட்டின் தற்போதைய கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூரில் இருந்த ஒரு சைன கோயிலாகும். இக்கோயில் சைனத்தின் இருபத்து மூன்றாவது தீர்தரங்கரான பார்சுவநாதருக்கு அமைக்கப்பட்டது ஆகும்.

வரலாறு

பழங்காலத்தில் செவிடப்பாடி என அழைக்கப்பட்ட ஒசூரில் ஸ்ரீ பூசந்திர சித்யான நந்தி தேவரின் மகனான தண்டநாயக்க கங்கியப்பன் என்பவரால் பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த பாரீசுவ ஜீனாலயம். இத்தகவலை ஒசூரில் வெங்கடேஷ் நகர் பகுதியில் உள்ள வெங்கடரமண சுவாமி கோயில் உள்ள குன்றில் உள்ள பொ.ஊ. 1127 ஆண்டைச் சேர்ந்த போசள மன்னன் விட்டுணுவர்தனன் காலத் தமிழ்க் கல்வெட்டு குறிப்பிடுகிறது.[1][2] இந்தக் குன்றிலேயே இந்த சைனக் கோயில் இருந்திருக்கிறது. அந்தக் கோயில் என்ன ஆனது என்று தெரியவில்லை. இங்கிருந்த சைனர்கள் இடம்பெயர்ந்த காலத்திற்கு பிறகு இப்போது உள்ள வெங்கடரமணர் கோயிலாக பிற்காலத்தில் அது மாற்றப்பட்டதாக இருக்க வாய்ப்புண்டு. இதற்குச் சான்றாகக் கோயிலை ஒட்டிய பகுதியிலேயே இந்தக் கல்வெட்டும் சைனத் தீர்தரங்கர் சிற்பமும், கோயிலுக்குப் படியேறும் படிக்கட்டை ஒட்டி இன்னொரு தீர்த்தரங்கர் சிற்பமும் உள்ளன. இந்தக் குன்றில் சைனத் துறவிகள் வாழ்ந்ததற்காண அடையாளங்கள் உள்ளன.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. இரா. இராமகிருட்டிணன் (2002). ஒசூர் அருள்மிகு சந்திர சூடேசுவரர் - ஓர் ஆய்வு. சென்னை: காவ்யா. p. 92.
  2. எஸ்.கே.ரமேஷ் (29 அக்டோபர் 2016). "ஓசூர் வெங்கடபெருமாள் கோயிலில் 12-ம் நூற்றாண்டு சமண கல்வெட்டுகள், சிற்பங்கள் கண்டுபிடிப்பு". செய்தி. தி இந்து. Retrieved 30 அக்டோபர் 2016.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya