இந்த இரண்டாம் பருவமானது 15 வசிப்பாளர்கள் கலந்து கொள்ளக்கூடியதாகவும், 60 ஒளிப்படமிகள் கொண்டதாகவும் உள்ளது.[2] பிக் பாஸ் தமிழ் இரண்டாம் பதிப்பின் வாசகமாக 'நல்லவர் யார்? கெட்டவர் யார்?' என்ற சொற்றொடர் உள்ளது.[3] சென்னையின் புறநகர்ப் பகுதியான செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி திரைப்பட நகரத்தில் இதற்கான ஆடம்பர வீடு அமைக்கப்பட்டது.[4][5] தவறுகளைச் செய்யும் போட்டியாளர்களுக்கு தண்டனை அதிகரிப்பதற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டில் சிறைச்சாலை அறையும் அமைக்கப்பட்டுள்ளது.[6][7]
இந்த பருவத்தில் வெற்றியாளராகவும் மற்றும் 50 லட்சம் ரொக்கப் பரிசைப் பெற்றவர் நடிகை ரித்விகா ஆவார். நடிகை ஐஸ்வர்யா தத்தா இரண்டாம் இடத்தைப் பிடித்து 5 லட்சம் ரொக்கப் பரிசை வென்றார். மற்ற இறுதிப் போட்டியாளராக நடிகைகள் விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகியோர் வந்தனர். பிக் பாஸ் வரலாற்றில் இறுதி சுற்றுக்குல் பெண்கள் மட்டும் நுழைந்த போட்டியாளர் என்றால் அது பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியாகும்.[8]
ஒளிபரப்பு
ஒவ்வொரு நாளின் அத்தியாயங்களும் முந்தைய நாளின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சனி ஞாயிற்றுக்கிழமை அத்தியாயங்களில் அந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளரின் போட்டி குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.
ரித்விகா, நடிகை, மெட்ராஸ், கபாலி ஆகியபடங்களில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.
மும்தாஜ், நடிகை, பல தமிழ் படங்களில் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தாடி பாலாஜி, நடிகர், பல தமிழ்த்திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார், விஜய் டிவி-இல் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் நடுவர்.
மமதி ச்சாரி, நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர் போன்ற முகங்களைக் கொண்டவர்.
ஷாரிக் ஹாஸன், நடிகர் மற்றும் தடகள வீரர், ரியாஸ் கான், உமா ரியாஸ் கான் ஆகியோரின் மகன். மற்றும் பென்சில் (2016) திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா தத்தா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
வைல்ட்கால்ட் நுழைவு
விஜயலட்சுமி ஃபெரோஸ், ஒரு தமிழ் நடிகை மற்றும் தயாரிப்பாளர். திரைப்பட இயக்குநரான அகத்தியனின் மகளான இவர் சென்னை 600028, அஞ்சாதே, சென்னை 600028 II ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காகவும், சன் தொலைக்காட்சித் தொடரான நாயகியில் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.
இறுதிக்கட்டத்துக்கு நுழையும் நுழைவுச்சாட்டான டிக்கெட் டு பினாலேவுக்கான பணியை அறிவிக்கவும், இவரது திரைப்படமான இராஜ பீமன் படத்தின் முதல் சுவரொட்டியை வெளியிடவும் வீட்டுக்கு வந்தார்.[27]
14
நாள் 97
சம்விதா மற்றும் ஜெயகுமார் (அமேசான் குறுஞ்செய்தி போட்டி வெற்றியாளர்கள்)
வாரத்தின் ஆடம்பர பட்ஜெட்டில் வாங்கப்பட்ட பொருட்களை வழங்க.[28]
15
நாள் 99
வைஷ்ணவி பிரசாத் மற்றும் ரம்யா என்எஸ்கே (முன்னாள் போட்டியாளர்கள்)
இறுதிக்கட்டத்தில் வீட்டில உள்வர்களுடன் நேரத்தை செலவிடவும், அவர்களுக்கு அறிவுரை வழங்கவும், அவர்களை வாழ்த்தவும்.[29][30][31][32]
நாள் 100
ஷாரிக் ஹுசேன் கான் மற்றும் நித்யா பாலாஜி (முன்னாள் போட்டியாளர்கள்)
நாள் 101
யாஷிகா ஆனந்த் மற்றும் தாடி பாலாஜி (முன்னாள் போட்டியாளர்கள்)
நாள் 102
சென்றாயன் மற்றும் மகத் ராகவேந்திரா (முன்னாள் போட்டியாளர்கள்)
நாள் 103
பொன்ம்பலம் மும்தாஜைத் தவிர முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும்
பொன்னம்பலத்தைத் தவிர அனைத்து முன்னாள் போட்டியாளர்களும்
பிக்பாஸ் 2இன் இறுதி நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டதால்.
விஜய் தேவரகொண்டா
பிக் பாஸ் தமிழ் 2 கோப்பையை வெளிப்படுத்துவதற்கு.
நடனமாடிகள்
பிக் பாஸ் வீட்டிலிருந்து நான்காம் இடம்பிடித்த ஜானானியை வெளியே அழைத்துச் செல்ல.
ஆரவ் (முதல் பருவ வெற்றியாளர்)
மூன்றாம் இடம் பிடித்த விஜயலட்சுமியை வெளியே அழைத்துச் செல்ல.
கமலகாசன் (நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக)
ரித்விக்கா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரை இறுதியில் பிக்பாஸ் மேடைக்கு அழைத்துச் செல்ல.
வாராந்திர சுருக்கம்
வாரம் 1
நுழைவு
யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத் ராகவேந்திரா, டேனியல் ஆன்னி போப், வைஷ்ணவி, ஜனனி, அனந்த் வைத்தியநாதன், ரம்யா என்.எஸ்.கே., சென்றாயன், ரித்விகா, மும்தாஜ், தாடி பாலாஜி, மமதி ச்சாரி, நித்யா, ஷாரிக் ஹாஸன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் துவக்க நாள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.
வீட்டின் தலைவர்
ஜனனி
தலைவருக்கான போட்டியளர்கள்
மஹத் மற்றும் மும்தாஜ்
சிறையில்
யாருமில்லை
வெளியேற்ற பரிந்துரை
அனந்த், மும்தாஜ், நித்யா, ரித்விகா
ஆடம்பர பட்ஜட் பணிகள்
வீட்டில் வசிப்பவர்கள் ஒருவரைப்பற்றி ஒருவர் கருத்து கூறுவது.[35]
ஃபீலா பீலா (வீட்டில் உள்ளவர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்படுவர். ஒரு குழுவைச் சேர்ந்தவர் கூறும் கதையை உண்மையா பொய்யா என கண்டறியவேண்டும்.)[35]
இவர் யார் என்று தெரிகிறதா (வீட்டில் உள்ளவர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்படுவர், ஒரு குழுவைச் சேர்ந்தவர் கூறும் கதையை எழுதியவர் யார் என கண்டறிய வேண்டும்.)[36]
சொன்னபடி கேளு (வீட்டு உறுப்பினர்கள் 2 பேராக 8 அணிகளாக பிரிக்கப்படுவர், ஒவ்வொரு குழுவும் உறையினில் எழுதப்பட்டதைப் பின்பற்ற வேண்டும்.)[36]
இந்த வீட்டை யார் சிறப்பாக நிர்வாகம் செய்யக்கூடியவர்கள் ஆண்களா பெண்களா? (வீட்டில் வசிப்வர்கள் பாலின அடிப்படையில் இரு அணிகளாக பிரிக்கப்படுவர். முதலில் ஆண்கள் குழு முதலாளிகளாகவும் பெண்கள் குழு வேலைக்காரர்களாகவும் இருப்பர். ஆண்கள் குழுவில் ஒவ்வொருவருக்கும் ஒரு பெண் பணியார் நியமிக்கப்படுவார் அவரிடம் வேலை வாங்கவேண்டும். பின்னர் பெண்கள் அணியினர் முதலாளிகளாகவும் ஆண்கள் வேலைக்காரர்களாகவும் என மாற இவர்கள் அவர்களிடம் வேலைவாங்க வேண்டும்.)[38][39]
தண்ணியில கண்டம் (வீட்டில் வசிப்பவர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்படுவர். ஒவ்வொரு அணிக்கும் துளைகள் இடப்பட்ட ஒரு தண்ணீர் தொட்டி ஒப்படைக்கப்படும். அதில் உள்ள நீரைக் கைகளைக் கொண்டு வெளியேறாமல் தடுத்தபடி இருக்கவேண்டும். ஒரு குழு உறுப்பினர் ஆங்கிலத்தில் பேசினாலோ, ஒலிவாங்கையை அணியாமலோ இருந்தால் எதிரணியிடம் தண்ணீரை இழக்க நேரிடும்.)[41]
திட்டம்போட்டு திருடுறக் கூட்டம் (வீட்டில் வசிப்பவர்கள் திருடர், காவல்துறையினர், பொதுமக்கள் என மூன்று அணிகளாக பிரிக்கப்படுவர். காவலர்களும், பொதுமக்களும் திருடர்களை திருடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். காவலர்கள் தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிப்பர்.)[43]
எங்க ஏரியா உள்ள வராத (வீட்டில் வசிப்பவர்கள் இரு அணிகளாக பிரிக்கப்படுவர். இரு அணிகளுக்கும் வைக்கப்படும் போட்டிகளில் வெல்பவர்களின் அணிக்கு வீட்டின் சில பகுதிகள் உரிமை ஆக்கப்படும். தோன்ற அணியினர் அந்தப் பகுதியில் நுழைய வென்ற அணியினர் கூறும் பணிகளைச் செய்து அதன்பிறகே நூழைய இயலும்.)[47]
வெளியேற்றம்
42 ஆம் நாள் வைஷ்ணவி இரகசிய அறைக்கு அனுப்பப்பட்டார்.[48]
வாரம் 7
நுழைவு
இரகசிய அறையில் 4 நாட்கள் இருந்த நிலையில் 46 ஆம் நாள் வைஷ்ணவி வீட்டில் மீண்டும் நுழைந்தார்.[20]
பொம்மலாட்டம் (வீட்டில் இருப்பவர்கள் இரு அணிகளாக பிரிக்கப்படுவர். வெளியில் இருந்துவரும் மூலப் பொருட்களைக் கொண்டு இரு அணிகளும் பொம்மைகளைச் செய்யவேண்டும். இரு அணிகளிலும் உள்ள ஒரு கண்காணிப்பாளர் எதிரணியினர் தயாரித்த பொம்மைகளை சரிபார்த்து ஏற்பர்/நிராகரிப்பர்.)[52]
உத்தம வில்லன்கள் (வீட்டுவசிப்பாளர்கள் 2 அணிகளாக பிரிக்கப்படுவர், ஒரு பிரிவினர் உச்ச நாயகர்களாகவும் இன்னொரு பிரிவினர் உச்ச வில்லன்களாக இருப்பர். உச்சநாயகர்கள் சிறையின் உள்ள ஒரு போலியை பூட்டுக்களைக் கொண்டு பாதுகாக்கவேண்டும், அதேசமயம் உச்சவில்லன்கள் உச்சநாயகர்களை எரிச்சலூட்டி, பூட்டை திறக்கவேண்டும். இரண்டு அணிகளும் தங்கள் பாத்திரங்களை ஒரு நாள் கழித்து மாற்றிக்கொண்டன, இப்பொழுது சூப்பர் ஹீரோக்கள் அணி குண்டுகளை தயாரிப்பதில் இருந்து சூப்பர் வில்லன்கள் அணியைத் தடுப்பது நோக்கமாக இருந்தது. )[54][55]
வெளியேற்றம்
70ஆம் நாள் மகத் வெளியேற்றப்பட்டார்.
வாரம் 11
வீட்டின் தலைவர்
மகத், சென்றாயன்
தலைவருக்கான போட்டியளர்கள்
ஐஸ்வர்யா, மும்தாஜ், சென்றாயன் மற்றும் யஷிகா (மகத்), கமல்ஹாசனால் தேர்ந்தெடுக்கப்பட்டார் (சென்றாயன்)
சிறையில்
யாருமில்லை
வெளியேற்ற பரிந்துரை
பாலாஜி, டேனியல் மற்றும் ஜனனி
ஆடம்பர பட்ஜட் பணிகள்
உறைதல் மற்றும் விடுபடுதல் (பிக் பாஸ் வீட்டுவசிப்பாளர்களை உறையச் சொல்லும்போது உறைந்துவிடவேண்டும் அவர் மீண்டும் விடுபடச் சொல்லும்வரை அசையாமல் இருக்கவேண்டும். இதில் தவறும் வீட்டுவசிப்பாளர்கள் தண்டிக்கப்படுவர்.)[23]
தொலை பேசியில் அழைக்கப்படும் வீட்டுவசிப்பாளர் அடுத்த வார வெளியேற்ற பரிந்துரைக்கு நேரடியாக பரிந்துரைக்கப் படுவர். அவர் இந்த வெளியேற்ற பரிந்துரையில் இருந்து தப்ப வேண்டுமானால் அந்த தொலைபேசி அழைப்பில் குறிப்பிடும் ஒரு செயலை ஒரு குறிப்பிட்ட வீட்டுவசிப்பாளரை செய்ய சம்மதிக்க வைத்து, அச்செயலை செய்விக்க வேண்டும்.[57]
வீட்டிலிருந்த விருந்தினர்களாக தங்கியிருந்த முதல் பருவ போட்டியாளர்களுடன் சில பணிகளில் ஈடுபட்டனர் விருந்தினர்கள் வீட்டில் ஒரு வாரம் தங்கி இருந்தனர்.[27]
இறுதிப் போட்டிக்கு நுழையும் போட்டி - சுத்தி சுத்தி வந்தீங்க (வீட்டுவசிப்பாளர்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் நீர் நிறைந்த கிண்ணம் தரப்படும். அந்தக் கிண்ணத்தை ஏந்தி வட்டமான ஒரு மேடையில் சுற்றிவரவேண்டும். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் தண்ணீர் அளவு குறைந்தவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார். இதில் இறுதிவரை தாக்குப்பிடிக்கும் வெற்றியாளர் இறுதிவாரத்துக்கான நுழைவுச்சாட்டை பெற்வார்.)[27]
வெளியேற்றம்
91ஆம் நாள் மும்தாஜ் வெளியேற்றப்பட்டார்
வாரம் 14
வீட்டின் தலைவர்
ஒருவரும் இல்லை
தலைவருக்கான போட்டியளர்கள்
இல்லை
சிறையில்
யாருமில்லை
வெளியேற்ற பரிந்துரை
ஐஸ்வர்யா, பாலாஜி, ரித்விகா, விஜயலட்சுமி, யாசிகா
ஆடம்பர பட்ஜட் பணிகள்
வீட்டில் வசிப்பவர்களுக்கு பல்வேறு பணிகள் கொடுக்கப்படும் அதில் ஈடுபடுபவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். இறுதிவரையிலான போட்டிகளில் அதிகபட்ச புள்ளிகளைப் பெறுபவர்களுக்கு எதிர்பாராத பரிசு அளிக்கப்படும்.[59]
வெளியேற்றம்
98ஆம் நாள் பாலாஜியும், யாஷிகாவும் வெளியேற்றப்பட்டனர்.[28][60]
வாரம் 15 இறுதி வரம்
வீட்டின் தலைவர்
ஒருவரும் இல்லை
தலைவருக்கான போட்டியளர்கள்
ஒருவரும் இல்லை
சிறையில்
யாருமில்லை
ஆடம்பர பட்ஜட் பணிகள்
இல்லை
இறுதியாளர்கள்
இறுதி வாரத்தில் பிக்பாசில் வெற்றிபெற மக்களின் வாக்குகளை எதிர்நோக்கி இருந்த இறுதியாளர்கள் பின்வறுமாறு: