1938 உலகக்கோப்பை காற்பந்து
1938 உலகக்கோப்பை காற்பந்து அல்லது 1938 பிஃபா உலகக்கோப்பை (1938 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஆண்களுக்கான உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் மூன்றாவது பதிப்பாகும். இப்போட்டிகள் பிரான்சில் 1938 சூன் 4 முதல் சூன் 19 வரை நடைபெற்றன. இறுதிப் போட்டியில் அங்கேரியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இத்தாலி தனது பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இத்தாலியின் 1934 மற்றும் 1938 அணிகள் ஒரே பயிற்சியாளரான விட்டோரியோ போசோவின் கீழ் பலமுறை உலகக் கோப்பையை வென்ற ஒரே ஆண்கள் தேசிய அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளன. இரண்டாம் உலகப் போரின் இடையூறு காரணமாக 1950 வரை இது கடைசி உலகக் கோப்பையாக இருந்தது.[1] தகுதி பெற்ற அணிகள்பின்வரும் 16 அணிகள் முதலில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இருப்பினும், 1938 மார்ச் 13 இல் ஆத்திரியா செருமனியுடன் இணைக்கப்பட்டதன் காரணமாக ஆத்திரியா போட்டியில் இருந்து வெளியேறியதால்[2][3] 15 அணிகள் மட்டுமே பங்கேற்றன.
இறுதிச் சுற்று
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கிப்பயணத்தில் 1938 FIFA World Cup என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
|
Portal di Ensiklopedia Dunia