புரூணை விரிகுடா
புரூணை விரிகுடா (ஆங்கிலம்: Brunei Bay; மலாய்: Teluk Brunei) என்பது போர்னியோ தீவில், மலேசியா, புரூணை ஆகிய இரு நாடுகளின் கடலோரப் பகுதியில்; புரூணையின் தலைநகரமான பண்டார் செரி பெகாவான் (Bandar Seri Begawan) நகருக்கு கிழக்கில் அமைந்துள்ள விரிகுடா ஆகும்.[1] புரூணையின் தனிமைப்படுத்தப்பட்ட தெம்புரோங் மாவட்டத்திற்கான (Temburong District) கடல் நுழைவாயில் ஆகும். இந்த மாவட்டம், புரூணையின் மற்ற பகுதிகளில் இருந்து வளைகுடாவைச் சுற்றியுள்ள மலேசியாவின் சரவாக் மாநிலத்தால் பிரிக்கப்பட்டு உள்ளது.[2] புரூணையின் முவாரா (Muara) மற்றும் தெம்புரோங் மாவட்டங்களை இணைக்கும் 30-கி.மீ. (19 மைல்) சாலை, 2018-இல் கட்டி முடிக்கப்பட்டது. இந்தச் சாலை புருணை விரிகுடாவைக் கடக்கிறது. புரூணை விரிகுடாவின் குறுக்கே செல்லும் பகுதி 14-கி.மீ. (8.7 மைல்) ஆகும்.[3] சுற்றுச்சூழல்புரூணை விரிகுடாவில் சுமார் 8,000 எக்டேர் அளவிற்கு அலை அலையான மணல்மேடுகள் (Tidal Mudflats), மணல்பரப்புகள், பவளப் பாறைகள், சதுப்புநிலங்கள் (Mangroves), கடற்கரை காடுகள் மற்றும் மணல்கல் தீவுகள் (Sandstone Islets) உள்ளன. பன்னாட்டு பறவை அமைப்பு (BirdLife International) இந்த விரிகுடாவை ஒரு முக்கியமான பறவைப் பகுதி என அடையாளம் கண்டுள்ளது. ஏனெனில் இந்த விரிகுடா பல்வேறு பறவை இனங்களின் வாழ்வியல் சரணாலயமாக விளங்குகிறது. அண்மைய காலத்தில் இங்கு நடைபெறும் கடலோர இழுவை மீன்பிடிப்பு (Inshore Trawling), நீர்ப்பறவை வேட்டை, மற்றும் சதுப்புநில அகற்றுதல் (Habitat Fragmentation) போன்ற செயல்பாடுகளினால் இங்குள்ள கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன.[4] சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia