லுபோக் அந்து மாவட்டத்தின் பரப்பளவு 3,142 சதுர கிலோமீட்டர்கள் (1,213 சதுர மைல்); 2023-இல் அதன் மொத்த மக்கள் தொகை 45,892 ஆகும். மக்கள்தொகையில் பெரும்பான்மை மக்கள் இபான் மக்கள். இந்த மாவட்டத்தில் முக்கியப் பொருளாதார நடவடிக்கை வேளாண்மை ஆகும்.[2]
பத்தாங் ஆய் ஆறு(Batang Ai) இந்த மாவட்டத்தின் வழியாக ஓடுகிறது. கம்போங் பாசிர் கிராமத்திற்கு செல்லும் வழியில் ஒரு தொங்கு பாலம் உள்ளது.[3] 1985-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட ஓர் அணையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக ஆயிரக் கணக்கான மக்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.[3]
அதனால் அவர்கள் இடம்பெயர்ந்தனர்.[2] 2018-இல் நங்கா கெசிட் (Nanga Kesit) கிராமத்தில் உள்ள ஒரு தொங்கு பாலம் வெள்ளம் காரணமாக இடிந்து விழுந்தது.[4]
நிர்வாகம்
1956-ஆம் ஆண்டு சரவாக் மாநில அரசாங்கத்தின் ஊராட்சி சட்டத்தின் கீழ் (State Government's Local Authorities Ordinance, 1956) லுபோக் அந்து மாவட்ட மன்றம் உருவாக்கப்பட்டது. இந்த மன்றம் தற்போது லுபோக் அந்து மாவட்டத்தை நிர்வகித்து வருகிறது.[5]
மக்கள்தொகையியல்
லுபோக் அந்து மாவட்ட இனக் குழுக்களின் விவரங்கள் (2023)[3]
↑Hamid, Siti Mardinah Binti Abdul; Hamali, Jamil Bin Haji; Abdullah, Firdaus (2016-06-15). "Performance Measurement for Local Authorities in Sarawak" (in en). Procedia - Social and Behavioral Sciences. IRSSM-6 The 6th International Research Symposium in Service Management 224: 437–444. doi:10.1016/j.sbspro.2016.05.416. பன்னாட்டுத் தர தொடர் எண்:1877-0428.