புஷ்கலாவதி
புஷ்கலாவதி (Pushkalavati) (பஷ்தூ மற்றும் Urdu: پُشْكَلآوَتي பண்டைய பரத கண்டத்தின் வடமேற்கில் கிமு 6-ஆம் நூற்றாண்டிற்கு முன்னிருந்த காந்தார நாட்டின் தலைநகரம் ஆகும்.[1] கிமு இரண்டாம் நூற்றாண்டு வரை, அகாமனிசியப் பேரரசின் கிழக்குப் பிரதேசத்தில் புஷ்கலாவதி நகரம் சிறப்புடன் விளங்கியது. தற்போது பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் சார்சத்தா மாவட்டத்தின் தலைநகரான சார்சத்தா நகரத்தில் பாயும் சுவாத் ஆறு-காபுல் ஆறுகள் கலக்குமிடத்தில் புஷ்கலாவதி நகரத்தின் தொல்லியல் களத்தை புஷ்கலாவதிகண்டறியப்பட்டது.[2][3] பண்டைய வரலாற்றில் புஷ்கலாவதிசொராஷ்டிரிய சமய வேத நூலான அவெத்தாவில், புஷ்கலாவதி நகரத்தைச் சுற்றிய பகுதிகளை, கடவுள் அகுரா மஸ்தா படைத்தார் எனக்கூறுகிறது. பாக்திரியாவின் மணிமகுடம் என அழைக்கப்படும் புஷ்கலாவதி நகரம், பண்டைய தட்சசீலத்தின் அருகில் உள்ளது. [4] பெயர்க்காரணம்சமஸ்கிருத மொழியில் புஷ்கலாவதி (पुष्कलावती) எனில் தாமரை போன்ற வடிவில் அமைக்கப்பட்ட நகரம் எனபொருளாகும். இராமாயணக் காவியத்தின்படி, இராமரின் தம்பியான பரதனின் மகன் புஷ்கலன் என்பவர் நிறுவியதாக அறியப்படுகிறது.[5] புஷ்கலாவதியின் சிதிலங்கள்![]() ![]() ![]() பண்டைய புஷ்கலாவதி நகரத்தில் பால ஹிசார் போன்ற இரண்டு தொல்லியல் களங்களில் சிதிலமடைந்த கிமு 2-ஆம் நூற்றாண்டின் பௌத்தச் சிற்பங்கள், தூபிகள், விகாரைகள் அகழ்வாய்வுகளில் கண்டறியப்பட்டது. [6][7]மேலும் இத்தொல்லியல் களத்தில் கிமு 1420-1160 மற்றும் கிமு 1400 - 800 காலத்திய மெருகூட்டப்பட்ட சிவப்பு மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டது. [8] இரண்டாம் அகழ்வாய்வில் கிமு 500 ஆண்டுகளுக்கு முந்தைய சிவப்பு மட்பாண்ட அகண்ட கிண்ணங்கள் கண்டறியப்பட்டது.[9] கிமு ஆறாம் நூற்றாண்டின் அகாமனிசியப் பேரரசின் கிழக்கில் உள்ள காந்தார மாகாணத்தின் மையமாக புஷ்கலாவதி நகரம் விளங்கியது.[10] பண்டைய புஷ்கலாவதி நகரத்தின் தொல்லியல் களத்தை முதன்முதலில் 1902-இல் பிரித்தானிய தொல்லியல் அறிஞர் ஜான் மார்ஷல் அகழ்வாய் மேற்கொண்டார். 1962-இல் மோர்டைமர் வீலர் அகாமனிசியப் பேரரசின் தொல்லியல் எச்சங்களை கண்டறிந்தார். இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia