காந்தார நாடு

காந்தார நாடு

காந்தார நாடு (Gandhara Kingdom) (பஷ்தூ: ګندارا, Urdu: گندھارا, அவெஸ்தான் மொழி: Vaēkərəta, சமக்கிருதம்: गन्धार) பரத கண்டத்தின் வடமேற்கில் அமைந்த பண்டைய பாரத நாடுகளில் ஒன்றாகும். காந்தார நாடு தற்கால பாகிஸ்தான் நாட்டின் புருசபுரம் முதல் சுவாத் சமவெளி வரையான பகுதிகளையும், ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் மாகாணம் மற்றும் கந்தகார் மாகாணம் பகுதிகளையும் கொண்டிருந்தது.[1][2]

மகாபாரதத்தில்

காந்தார நாடு மகாபாரத காவியத்தில் காந்தார நாட்டையும், அதன் மன்னர்களையும் விரிவாக குறித்துள்ளது. காந்தார நாட்டின் மன்னன் சுவலனின் மகன் இளவரசன் சகுனி ஆவார். சகுனியின் மகன் பெயர் உல்லூகன். காந்தார இளவரசி காந்தாரி, குரு நாட்டின் மன்னர் திருதராட்டிரனை மணந்து, கௌரவர் எனும் நூறு மகன்களையும்; துச்சலை எனும் ஒரு மகளை ஈன்றாள். துரியோதனன் சார்பாக சொக்கட்டான் காய்களை உருட்டிய சகுனியின் திறமையால், சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்றனர். சூதாட்ட ஒப்பந்தப்படி பாண்டவர்கள் திரௌபதியுடன் 12 ஆண்டுகள் காடுறை வாழ்வும்; ஒரு ஆண்டு தலைமறைவு வாழ்க்கையை நடத்த வேண்டியதாயிற்று.

குருச்சேத்திரப் போரில்

குருச்சேத்திரப் போரில் சகுனியின் தலைமையிலான காந்தாரா நாட்டுப் படைகள், கௌரவர் அணியின் சார்பாக, பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டது.

சகுனியின் உடன்பிறப்புகளான கயா, கவாட்சன், விருசவா, சார்மவாத், ஆர்ஜவன் மற்றும் சுகன் குருச்சேத்திரப் போரில் சகுனியுடன் இணைந்து போரிட்டனர். (6,91)

காந்தாரா நாட்டு போர்ப்படைத் தலைவர் விரிசக் மற்றும் ஆச்சாலா அருச்சுனனுடன் போரிட்டனர். (7,28)

காந்தாரா நாட்டு மன்னன் சுவலனின் மகன் காளிகேயனை அபிமன்யு கொன்றார். (7,47)

பாண்டவர்களில் இளையவரான சகாதேவன், சகுனியையும், அவர்தம் மகன் உலூகனையும் கொன்றார். (9,28)

மேற்கோள்கள்

  1. Schwartzberg, Joseph E. (1978). A Historical atlas of South Asia. Chicago: University of Chicago Press. p. 145, map XIV.1 (d). ISBN 0226742210.
  2. Content mirrored from this map


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya